செந்நிற ஒளியை உமிழும் ‘மாஸ்டியோ லாம்ப்’


செந்நிற ஒளியை உமிழும் ‘மாஸ்டியோ லாம்ப்’
x
தினத்தந்தி 15 May 2019 1:41 PM IST (Updated: 15 May 2019 1:41 PM IST)
t-max-icont-min-icon

காலை சூரியோதயக் காட்சியை விரும்பாதவர் யாருமில்லை

சரியான நேரத்தில் சூரிய உதயத்தை பார்த்து விட முடியாது. அதையே நம் வீட்டிற்குள் தினமும் பார்க்க முடிந்தால்?, ஆம் மாஸ்டியோ லாம்ப் இருந்தால் இந்த அனுபவத்தை நாம் பெற முடியும். பாகிஸ்தானிலிருந்து கொண்டு வரப்பட்ட இமாலய உப்பு கற்களை கொண்டு கைதேர்ந்த கலைஞர்கள் மூலம் உருவாக்கப்படுகிறது இந்த லாம்ப்.

இந்த கற்களை பாலிஷ் செய்து மெருகேற்றாமல் அதன் இயற்கையான வடிவத்தை அப்படியே செதுக்கி இந்த டேபிள் லைட்டை உருவாக்குகின்றனர். அதனால் விளக்கை போடும் போது அந்த கீறல்கள் கூட ஓவியம் போல வெகு அழகாக இருக்கிறது.

செங்கதிர்களின் நிறத்தில் ஜொலிக்கும் இந்த விளக்கை நமது தேவைக்கேற்ப வெளிச்சம் கூட்டியோ குறைத்தோ வைத்துக் கொள்ளலாம். இதில் வயர்லெஸ் சார்ஜர், பேனா மற்றும் செல்போன் ஹோல்டர்கள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. ஒன் டச்சில் இயங்கும் இந்த லாம்ப் மன அமைதியை ஏற்படுத்தும். இதன் விலை சுமார் ரூ.5,360.


Next Story