வானவில் : வளைந்து கொடுக்கும் ‘ட்ரைபாட்’


வானவில் : வளைந்து கொடுக்கும் ‘ட்ரைபாட்’
x
தினத்தந்தி 15 May 2019 9:05 AM GMT (Updated: 15 May 2019 9:05 AM GMT)

போட்டோ எடுக்கும் போது வசதியாக போன்களை பிடித்துக் கொள்ள உதவும் ட்ரைபாட்கள் பல வடிவங்களில் வெவ்வேறு வகையான சிறப்பம்சங்களுடன் களமிறங்கி வருகின்றன.

போன்களை பிடித்துக் கொள்ள உதவும் ட்ரைபாட்கள் பல வடிவங்களில் வெவ்வேறு வகையான சிறப்பம்சங்களுடன் களமிறங்கி வருகின்றன. இந்த யுபீசைஸ் ( UBEESIZE ) ட்ரைபாட் பார்ப்பதற்கு கோணல் மானலாக இருந்தாலும் இதன் அம்சங்கள் பலே என்று சொல்ல வைக்கும் வகையில் இருக்கிறது. மிகவும் லைட் வெயிட்டாக இருப்பதால் நாம் செல்லுமிடங்களுக்கு பேக்கில் வைத்து சுலபமாக எடுத்து செல்ல முடியும்.

இந்த ட்ரைபாட் கருவியில் நமது ஸ்மார்ட் போன் மட்டுமின்றி டிஜிட்டல் கேமராவையும் வைத்து பயன்படுத்தலாம். இத்துடன் இணைப்பாக ஒரு வயர்லெஸ் புளூடூத் ரிமோட்டும் வருகிறது. இந்த ரிமோட் 30 அடிகள் வரை இயங்கக்கூடியது.

ஆப்பிள் மட்டும் ஆண்ட்ராய்டு ஆகிய இரண்டு இயங்குதளங்களிலும் இது இயங்கும். இந்த ட்ரைபாடின் கால்கள் ஆக்டோபஸ் கால்கள் போன்றிருப்பதால் எப்படி வேண்டுமானாலும் வளைத்து நமக்கு வேண்டிய கோணத்தில் வைத்து புகைப்படம் எடுக்கலாம்.தரமான போம் மற்றும் பிளாஸ்டிக்கினால் உருவாக்கப்பட்டுள்ள இந்த ட்ரைபாட் நீடித்து உழைக்கும். இதன் விலை ரூ.2630 ரூபாய்.


Next Story