மாவட்ட செய்திகள்

குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல் + "||" + Public road traffic requesting drinking water

குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல்

குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல்
திருப்பத்தூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல் ஈடுபட்டனர்.

வாணியம்பாடி,

திருப்பத்தூர் ஒன்றியம், மரிமாணிகுப்பம் ஊராட்சி ஓமகுப்பம் பகுதியில் கடந்த சில மாதங்களாக குடிநீர் பிரச்சினை நிலவி வருகிறது. இது பற்றி அந்த பகுதி பொதுமக்கள் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் முறையீடு செய்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் நேற்று திருப்பத்தூர் – ஆலங்காயம் பிரதான சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். அப்போது குடிநீர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். 

தகவல் அறிந்ததும் வாணியம்பாடி தாசில்தார் முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் மாரி மற்றும் குரிசிலாபட்டு, ஆலங்காயம் போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். 

இதனையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


தொடர்புடைய செய்திகள்

1. தாளவாடி அருகே அதிக பாரம் ஏற்றிவந்த 3 லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்தனர்
தாளவாடி அருகே அதிக பாரம் ஏற்றி வந்த 3 லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
2. கலெக்டர் அலுவலகத்துக்கு குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் வந்த பொதுமக்கள்
சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்கூட்டத்தில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் வந்து பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
3. மின் வாரிய ஒப்பந்த ஊழியர்கள் திருச்சியில் மறியல் போராட்டம் 1,140 பேர் கைது
பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் மின் வாரிய ஒப்பந்த ஊழியர்கள் மறியல் போராட்டம் நடத்தினார்கள். அவர்களில் 1,140 பேரை போலீசார் கைது செய்தனர்.
4. ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆக்கிரமிப்பு அகற்றத்தை எதிர்த்து மறியல்; தள்ளுமுள்ளு
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதை கண்டித்து மறியல் நடந்தது.
5. தேன்கனிக்கோட்டை அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானை பொதுமக்கள் அச்சம்
தேன்கனிக்கோட்டை அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானையால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.