பறக்கும்படை நடத்திய வாகன சோதனையில் வெடிபொருட்கள் பறிமுதல்
வந்தவாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தேர்தல் பறக்கும் படையினர் தெள்ளார் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே வாகன சோதனை மேற்கொண்டிருந்தனர்.
வந்தவாசி,
திண்டிவனம் நோக்கிச் சென்ற மினி லாரியை நிறுத்தி சோதனை செய்த போது அதில் 3 ஆயிரம் ஜெலட்டின் குச்சிகள், 2 ஆயிரத்து 600 டெட்டனேட்டர்கள் ஆகியவை அனுமதி இன்றி எடுத்துச் செல்வது தெரிய வந்தது.
இதை தொடர்ந்து ஜெலட்டின்குச்சிகள், டெட்டனேட்டர்கள் ஆகிய வெடி பொருட்களுடன் மினி லாரியை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து தெள்ளார் போலீசில் ஒப்படைத்தனர்.
இதுபற்றி தெள்ளார் போலீசார் வழக்குப் பதிவு செய்து லாரியை ஓட்டி வந்த கண்டவரட்டி கிராமத்தைச் சேர்ந்த டிரைவர் முரளியை (22) போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story