மாவட்ட செய்திகள்

100 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட அரசு பள்ளி சீரமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு + "||" + Will the government school be renovated 100 years ago during the British period? Public expectation

100 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட அரசு பள்ளி சீரமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

100 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட அரசு பள்ளி சீரமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
திருத்துறைப்பூண்டியில் 100 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட அரசு பள்ளியை சீரமைக்க வேண்டும் என்று, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருத்துறைப்பூண்டி,

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் 100 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட திருத்துறைப்பூண்டி போர்டு ஹைஸ்கூல் என்று அழைக்கப்படும் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டமாக இருந்த காலத்தில் திருத்துறைப்பூண்டி, வாய்மேடு, வேதாரண்யம், தலைஞாயிறு, முத்துப்பேட்டை, எடையூர், சங்கேந்தி, கோட்டூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் இந்த பள்ளியில் படித்து வந்தனர்.


தற்போது தனியார் பள்ளியின் மோகத்தாலும், அரசு பள்ளியை புறக்கணிக்கும் பெற்றோராலும், ஆசிரியர் பற்றாக்குறை காரணமாகவும், இந்த பள்ளியில் மாணவர் சேர்க்கை வெகுவாக குறைந்துள்ளது. இதனால் இந்த பள்ளியில் படித்த முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள், முன்னாள் மாணவர்கள் உள்ளிட்டோர் இந்த பள்ளியை நவீனப்படுத்தி சிறப்பு வசதிகள் உள்ள பள்ளியாக மாற்றி மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க முடிவு செய்தனர்.

சுற்றுச்சுவர்

மேலும் சமீபத்தில் டெல்டா மாவட்டத்தையே நிலைகுலைய வைத்த கஜா புயலால் பள்ளியின் சுற்றுச்சுவர் கீழே சாய்ந்ததோடு உள்ளே இருந்த மரங்களும் சாய்ந்துள்ளன. ஆனால் கல்வித்துறை அதிகாரிகள் சுற்றுச்சுவரை உடனடியாக கட்டாமல், மரங்களையும் அப்புறப்படுத்தாமல் உள்ளனர். இதனால் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் புகுந்து மது அருந்துதல் போன்ற விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பள்ளிக்கு சுற்றுச்சுவரை கட்டி உள்ளே சாய்ந்து கிடக்கும் மரங்களை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

1. டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி சேலம் கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
சேலத்தில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
2. மது விற்பனையை தடுக்க கோரி பொதுமக்கள் மனு
குளித்தலை அருகே உள்ள கருங்கலாப்பள்ளி பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று குளித்தலை போலீஸ் நிலையத்தில் கோரிக்கை மனு ஒன்று கொடுத்தனர்.
3. ராசிபுரத்தில் லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்
ராசிபுரத்தில் லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
4. உணவுப்பொருள் வழங்கல் குறித்த பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் 53 மனுக்கள் பெறப்பட்டது
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தாவின் உத்தரவின்படி, சிறுவாச்சூர் கிராமத்தில் உணவுப்பொருள் வழங்கல் சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நேற்று நடந்தது.
5. அரியலூர் மேம்பாலப்பணி விரைந்து முடிக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
அரியலூர் மேம்பாலப்பணி விரைந்து முடிக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.