மாவட்ட செய்திகள்

காரைக்குடி அருகே அண்ணன் மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்த தம்பி கைது தாயிடம் தகராறு செய்ததால் ஆத்திரம் + "||" + Near Karaikudi The brother who laid fire on his brother was arrested Because she disputes with her mother

காரைக்குடி அருகே அண்ணன் மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்த தம்பி கைது தாயிடம் தகராறு செய்ததால் ஆத்திரம்

காரைக்குடி அருகே அண்ணன் மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்த தம்பி கைது தாயிடம் தகராறு செய்ததால் ஆத்திரம்
காரைக்குடி அருகே தூங்கிக் கொண்டிருந்த அண்ணன் மீது மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்த தம்பியை போலீசார் கைது செய்தனர்.

காரைக்குடி,

காரைக்குடி அருகே செட்டிநாடு பக்கம் உள்ள சூரக்குடி பகுதியைச் சேர்ந்தவர் மீனாள். இவருக்கு பிரகாஷ் (29), பிரதீப் (வயது 24) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

பிரதீப் சென்னையில் உள்ள ஒரு சலூன் கடையில் வேலை பார்த்து வந்தார். சமீபத்தில் அவர் ஊருக்கு வந்திருந்தார். இந்த நிலையில் பிரகாஷ் மது அருந்தி விட்டு வீட்டுக்கு வந்து தனது தாய் மீனாளிடம் சாப்பாடு கேட்டு தகராறு செய்துள்ளார். இதனை அவரது தம்பி பிரதீப் தட்டிக் கேட்டார்.

இதில் அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் தூங்கச் சென்று விட்டனர். அண்ணன் மீது கடும் ஆத்திரத்தில் இருந்த பிரதீப் அதிகாலை 3 மணிக்கு திடீரென எழுந்தார். பின்னர் அங்கிருந்த மண்எண்ணெய் கேனை எடுத்து தூங்கிக் கொண்டிருந்த தனது அண்ணன் மீது மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்தார்.

இதில் அவர் பலத்த தீக்காயம் அடைந்தார். பின்னர் அங்கிருந்து பிரதீப் தப்பி ஓடி விட்டார். வலியால் அலறி துடித்த பிரகாஷின் சத்தம் கேட்டு அங்கு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக காரைக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரதீப்பை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அண்ணனை தம்பியே உயிரோடு தீ வைத்து எரித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்காவில் பரபரப்பு சம்பவம் : நடுவானில், விமானத்தில் சிறுமியுடன் உல்லாசம் - தொழிலதிபர் கைது
அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஸ்டீபன் பிராட்லே மெல் (வயது 53). தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் இவர் சொந்தமாக சில விமானங்களை வைத்துள்ளார்.
2. கன்டெய்னர் லாரியை கடத்தி ரூ.1½ கோடி செம்பு கம்பி கொள்ளை : 6 பேர் கும்பல் கைது
நவிமும்பையில் கன்டெய்னர் லாரியை கடத்தி ரூ.1½ கோடி மதிப்பிலான செம்பு கம்பிகளை கொள்ளையடித்த 6 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.
3. வஜ்ரேஷ்வரி கோவிலில் கொள்ளையடித்த 5 பேர் கைது : ரூ.2.83 லட்சம் பறிமுதல்
பிரசித்தி பெற்ற வஜ்ரேஷ்வரி கோவிலில் உண்டியலை உடைத்து ரூ.7.10 லட்சத்தை கொள்ளையடித்த 5 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 83 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
4. லஞ்சம் வாங்கிய மின்வாரிய வணிக ஆய்வாளர் கைது
வாலாஜாவில் லஞ்சம் வாங்கிய மின்வாரிய வணிக ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.
5. பாலித்தீன் பை தயாரிக்கும் நிறுவன பங்குதாரரிடம் போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.2¾ கோடி மோசடி செய்த 2 பேர் கைது
திருப்பூரில் பனியன் நிறுவனங்களுக்கு பயன்படுத்தும் பாலித்தீன் பை தயாரிக்கும் நிறுவன பங்குதாரரிடம், போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.2¾ கோடி மோசடி செய்த 2 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.