மாவட்ட செய்திகள்

பரமக்குடியில் கடந்த 4 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யாததால் பொதுமக்கள் அவதி + "||" + In paramakkudi The public has not been drinking water since last 4 days

பரமக்குடியில் கடந்த 4 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யாததால் பொதுமக்கள் அவதி

பரமக்குடியில் கடந்த 4 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யாததால் பொதுமக்கள் அவதி
பரமக்குடியில் கடந்த 4 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யாததால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

பரமக்குடி,

பரமக்குடியில் சுமார் 1½ லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது கோடை வெயில் சுட்டெரித்து வருவதால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். மழையும் பெய்யாததால் கண்மாய்கள், குளங்கள் வறண்டு போய் நீரின்றி காய்ந்து கிடக்கின்றன. இதனால் கால்நடைகள் மேய்ச்சலுக்கு சென்றும் குடிக்க நீரின்றி அலைகின்றன.

வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய்களில் நீர்மட்டம் குறைந்து போய் பயனற்று வருகின்றன. இதனால் ஏராளமானோர் பணத்தை செலவழித்து மாற்று இடத்தில் புதிய ஆழ்குழாய் போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பரமக்குடியில் கடந்த 4 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் பொதுமக்கள் குடிநீருக்காக தினமும் அவதிப்பட்டு வருகின்றனர்.

காவிரி குடிநீர், நகராட்சி குடிநீர் என எதுவும் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் தினமும் காலை, மாலை நேரத்தில் குழாய்களை பார்த்து பார்த்து மக்கள் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர். வேறு வழியின்றி 1 குடம் தண்ணீர் ரூ.5–க்கு வாங்கி பயன்படுத்தும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக குடிநீர் வினியோகம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. கோவில் நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு பட்டா கேட்டு கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
கோவில் நிலங்களில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருக்கும் பொதுமக்கள் தங்களுக்கு பட்டா கேட்டு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
2. முசிறி அருகே மின்கம்பங்கள் சாய்ந்ததால் 4 நாட்களாக மின்தடை பொதுமக்கள் அவதி
முசிறி அருகே மின்கம்பங்கள் சாய்ந்ததால்4நாட்களாக அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்துள்ளனர்.
3. பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக பேனர் வைத்தால் ஓராண்டு சிறை - தமிழக அரசு எச்சரிக்கை
தமிழகத்தில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக பேனர் வைத்தால் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை வெளியிட்டு இருக்கிறது.
4. தெற்கு பொய்கைநல்லூரில் ஆபத்தான டிரான்ஸ்பார்மர் அகற்றப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
தெற்கு பொய்கைநல்லூரில் ஆபத்தான நிலையில் உள்ள டிரான்ஸ்பார்மரை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
5. மணப்பாறையில் குடிநீர் கேட்டு நகராட்சி அலுவலகம் முன் பொதுமக்கள் தர்ணா
மணப்பாறையில் குடிநீர் கேட்டு நகராட்சி அலுவலகம் முன் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை