“தினத்தந்தி” செய்தி எதிரொலி: சாலையில் காய்ந்த கரும்புகள் அரவைக்கு கொண்டு செல்லப்பட்டன


“தினத்தந்தி” செய்தி எதிரொலி: சாலையில் காய்ந்த கரும்புகள் அரவைக்கு கொண்டு செல்லப்பட்டன
x
தினத்தந்தி 15 May 2019 10:30 PM GMT (Updated: 15 May 2019 10:01 PM GMT)

“தினத்தந்தி” செய்தி எதிரொலியாக ஒரத்தநாடு அருகே அறுவடை செய்யப்பட்டு சாலையில் காய்ந்த கரும்புகள் அரவைக்காக ஆலைக்கு வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டது.

ஒரத்தநாடு,

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு மற்றும் திருவோணம் பகுதி விவசாயிகள் குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை மூலம் கரும்பு பயிரிட்டு வருகின்றனர். இவ்வாறு பயிடப்படும் கரும்புகள் விளைந்த பிறகு அவைகளை கொள்முதல் செய்து ஆலைக்கு எடுத்துச்செல்ல சம்மந்தப்பட்ட அலுவலர்கள் காலதாமதம் செய்வதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர். மேலும் ஒரத்தநாட்டை அடுத்துள்ள அக்கரைவட்டம் கிராமத்தில் அறுவடை செய்யப்பட்ட கரும்புகள் 6 நாட்களுக்கு மேலாக சாலை ஓரங்களில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. தற்போது கடும் வெயிலில் கரும்புகள் காய்ந்ததால் கரும்புகளில் சாறின் அளவு குறைந்து வருவதால் அறுவடை செய்யப்பட்ட கரும்பை உடனடியாக வாகனங்களில் ஆலைக்கு கொண்டு சென்று அரவை செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இது குறித்த செய்தி தினத்தந்தியில் படத்துடன் வெளியானது.

ஆலைக்கு சென்ற கரும்புகள்

இதைத்தொடர்ந்து இந்த பிரச்சினையில் சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை மேற்கொண்டனர். இதன்பிறகு அக்கரைவட்டம் கிராமத்தில் அறுவடை செய்து ஆலைக்கு செல்லாமல் கடந்த 6 நாட்களாக சாலையோரம் வெயிலில் காய்ந்த கரும்புகளை

சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் டிராக்டரில் ஏற்றி அரவைக்காக குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலைக்கு கொண்டு சென்றனர். இதைப்போல விளைந்த கரும்புகளை விரைவாக கொள்முதல் செய்து கரும்புகளை ஆலைக்கு கொண்டு செல்ல அதிகாரிகள் தொய்வின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story