மாவட்ட செய்திகள்

பதிவு செய்யாத விதைகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை அதிகாரி எச்சரிக்கை + "||" + If you sell unregistered seeds, a severe action officer warns

பதிவு செய்யாத விதைகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை அதிகாரி எச்சரிக்கை

பதிவு செய்யாத விதைகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை அதிகாரி எச்சரிக்கை
பதிவு செய்யாத விதைகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் நெல், மக்காச்சோளம், எள், பயறு வகை பயிர்கள், எண்ணெய்வித்துக்கள் அதிகளவில் பயிர் செய்யப்படுகின்றது. இவற்றை பயிரிட வேளாண்மைத்துறை மட்டுமின்றி தனியார் துறை விதை உற்பத்தியாளர்களும் விதை உற்பத்தி செய்து வருகின்றனர்.


இந்த விற்பனையினை ஒழுங்கு முறைப்படுத்த கோவை விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்றுத்துறை தனியார் ரகம் மற்றும் வீரிய ரகங்களை இந்த துறையில் பதிவு செய்து, பதிவு எண் பெற்ற பின்னரே விற்பனை செய்ய வேண்டும். இதன் அடிப்படையில் தஞ்சை மாவட்டத்தில் விதை விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்யப்படும் தனியார் ரகங்கள் மற்றும் வீரிய ரகங்கள் அனைத்தும் பதிவு செய்ய வேண்டும்.

நடவடிக்கை

அவ்வாறு பதிவு செய்யப்பட்டு பதிவு எண் உள்ள ரகங்கள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். பதிவு செய்யப்படாத ரகங்களை விற்பனையாளர்கள் இருப்பு வைத்திருந்தாலோ, விற்பனை செய்தாலோ, அவர்கள் மீது விதைகள் சட்டம் மற்றும் விதைகள் கட்டுப்பாட்டு ஆணையின்படி உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. உரிமம் பெறாமல் வீட்டு உபயோக பூச்சி மருந்துகள் விற்றால் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை
உரிமம் பெறாமல் வீட்டு உபயோக பூச்சி மருந்துகள் விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் உமா மகேஸ்வரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
2. தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு அனல் காற்று வீசும்; சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
3. தொட்டியம் அருகே அறநிலையத்துறை அதிகாரி சிறைபிடிப்பு
தொட்டியம் அருகே அறநிலையத்துறை அதிகாரியை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.
4. 10 லட்சம் விலங்கு மற்றும் தாவர இனங்கள் அழியும் சூழ்நிலை; ஐ.நா. அமைப்பு எச்சரிக்கை
உலகில் 10 லட்சம் விலங்கு மற்றும் தாவர இனங்கள் அழிய கூடிய ஆபத்து நிறைந்த சூழல் உள்ளது என ஐ.நா. அமைப்பு எச்சரித்து உள்ளது.
5. சாலைகள், பாலங்கள் கட்டுமான பணிகளை நிறுத்துங்கள்; மகாராஷ்டிராவில் நக்சலைட்டுகள் எச்சரிக்கை
மகாராஷ்டிராவில் போலீசார் உள்பட 16 பேர் கொல்லப்பட்ட நிலையில் சாலைகள் மற்றும் பாலங்கள் கட்டுவதனை நிறுத்த வேண்டுமென நக்சலைட்டுகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.