விவசாயத்தை நாசமாக்கும் திட்டங்களை செயல்படுத்த கூடாது நெடுவாசலில் ஜி.கே.வாசன் பேட்டி


விவசாயத்தை நாசமாக்கும் திட்டங்களை செயல்படுத்த கூடாது நெடுவாசலில் ஜி.கே.வாசன் பேட்டி
x
தினத்தந்தி 16 May 2019 4:45 AM IST (Updated: 16 May 2019 3:40 AM IST)
t-max-icont-min-icon

விவசாயத்தையும், விளைநிலங்களையும் நாசமாக்கும் திட்டங்களை செயல்படுத்த கூடாது என்று ஜி.கே.வாசன் கூறினார்.

கீரமங்கலம்,

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே உள்ள நெடுவாசல் மேற்கு குருவாடி கிராமத்தை சேர்ந்தவர் ராஜா.பரமசிவம். முன்னாள் எம்.பி.யான இவர் உடல்நலக்குறைவால் சென்னையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது உடல் சொந்த ஊரில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அங்கு பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.

நாசகார திட்டம்

இதில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் நெடுவாசல் குருவாடியில் முன்னாள் எம்.பி. ராஜா.பரமசிவம் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ராஜா.பரமசிவம் மிகவும் பின்தங்கிய குடும்பத்தில் பிறந்து அ.தி.மு.க.வில் எம்.பி.யாக, மாவட்ட செயலாளராக சிறப்பாக பணியாற்றினார். அவரது இறப்பு புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்கு இழப்பாக உள்ளது.

விளை நிலங்களை நாசமாக்கி, விவசாயிகளை அழித்து, குடிதண்ணீரை மாசுபடுத்தும் ஹைட்ரோ கார்பன் போன்ற எந்த திட்டத்தையும் திணிக்க கூடாது. இது போன்ற நாசகார திட்டங்களை அனுமதிக்க கூடாது என்பதை வலியுறுத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story