மாவட்ட செய்திகள்

சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் திருவிழா தொடங்கியது 23-ந் தேதி தேரோட்டம் + "||" + The Madurakaliyamman temple festival started on 23rd February

சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் திருவிழா தொடங்கியது 23-ந் தேதி தேரோட்டம்

சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் திருவிழா தொடங்கியது 23-ந் தேதி தேரோட்டம்
சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் திருவிழா காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 23-ந்தேதி நடக்கிறது.
பெரம்பலூர்,

பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில், ஆதிசங்கரர் வழிபட்டதால் பெருமைபெற்ற மதுரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா நேற்று முன்தினம் நள்ளிரவு காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அன்று நள்ளிரவு பெரியசாமி மலையில் செல்லியம்மனுக்கு காப்பு கட்டுதலும், அதனைத்தொடர்ந்து நேற்று மதுர காளியம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் நடந்தது. பின்னர் இரவு 10 மணிக்கு சந்தி மறித்தல் நிகழ்ச்சி நடந்தது.


இன்று (வியாழக்கிழமை) இரவு 10 மணிக்கு குடி அழைத்தல் புறப்பாடும், அதனைத்தொடர்ந்து மறுநாள்(வெள்ளிக்கிழமை) அதிகாலை 3 மணிக்கு மேல் கோவிலுக்கு குடி அழைத்து வருதல், தொடர்ந்து சிவவழிபாடும், அன்ன வாகனத்தில் அம்மன் மற்றும் பரிவார தெய்வங்கள் திருவீதி உலாவும் நடக்கிறது. நாளைமறுநாள் (சனிக்கிழமை) பெருமாள் வழிபாடு, காலை மற்றும் இரவு நேரத்தில் சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நடைபெறுகிறது.

திருக்கல்யாணம்

19-ந்் தேதி மாரியம்மன் வழிபாடும், காலை 9 மணிக்கு ரிஷப வாகனத்தில் அம்மன் மற்றும் பரிவார தெய்வங்கள் திருவீதி உலாவும், மாலை 3 மணிக்கு மேல் பக்தர்கள் அலகு குத்துதல் மற்றும் தீச்சட்டி ஏந்தி வருதலும், இரவு ரிஷப வாகனத்தில் அம்மன் திருவீதி உலாவும் நடக்கிறது.

20-ந்் தேதி காலையில் அய்யனார் வழிபாடும், யானை வாகனத்தில் அம்மன் திருவீதி உலாவும் நடக்கிறது. இரவில் கோவில் நடை முன்பு பக்தர்கள் நாக்கில் அலகு குத்துதல் நிகழ்ச்சி நடக்கிறது. 21-ந் தேதி மலைவழிபாடு மற்றும் கண்ணாடி ரத விழாவும், 22-ந்் தேதி உற்சவர் அம்பாளுக்கு திருக்கல்யாணம் உற்சவமும் நடக்கிறது. தொடர்ந்து இரவு 10 மணிக்கு மேல் கோவிலில் இருந்து வெள்ளிக்குதிரை வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடக்கிறது.

தேரோட்டம்

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 23-ந் தேதி(வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு நடக்கிறது. தேரோட்டத்தையொட்டி மதியம் 1 மணிக்கு மதுரகாளியம்மன் நிரந்தர அன்னதான அறக்கட்டளை சார்பில் அன்னதானம் நடக்கிறது. தேரோட்டம் முடிந்த பிறகு அன்று மதியம் சோலை முத்தையா வழிபாடு நடக்கிறது.

24-ந்தேதி இரவு ஊஞ்சல் விழாவும், 25-ந்தேதி விடையாற்றி விழாவும் நடக்கிறது. 26-ந்தேதி கோவில் சிறப்பு நடை திறக்கப்படுகிறது. 27-ந்தேதி மூலஸ்தான சிறப்பு வழிபாடு மற்றும் சுவாமி மலை ஏற்றத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை திருச்சி உதவி ஆணையர் ராணி, கோவில் செயல் அலுவலர் பாரதிராஜா மற்றும் கோவில் பணியாளர்கள், பூசாரிகள் மற்றும் மதுர காளியம்மன் பக்தர்கள் செய்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

1. சீகன்பால்கு 300-வது ஆண்டு நினைவாக பைபிள் எழுதும் சாதனை திருவிழா 1,464 பேர் பங்கேற்பு
சீகன்பால்கு 300-வது ஆண்டு நினைவாக தரங்கம்பாடியில் பைபிள் எழுதும் சாதனை திருவிழா நடைபெற்றது. இதில் 1,464 பேர் பங்கேற்றனர்.
2. மாத்தூர் புனித பிரான்சிஸ் அசிசியார் ஆலய தேர்பவனி திரளான பக்தர்கள் பங்கேற்பு
மாத்தூர் புனித பிரான்சிஸ் அசிசியார் ஆலய தேர்பவனி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
3. நெய்தலூர் கோட்டை மாரியம்மன் கோவிலில் வைகாசி திருவிழா
நெய்தலூர் கோட்டை மாரியம்மன் கோவிலில் வைகாசி திருவிழாவையொட்டி திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
4. கரூர் மாரியம்மன் கோவில் தேரோட்டம் நாளை நடக்கிறது
கரூர் மாரியம்மன் கோவிலில் திருவிழாவையொட்டி நாளை தேரோட்டம் நடக்கிறது.
5. காடம்பாடியில் கோவில் உண்டியல் திருட்டு 4-வது முறையாக மர்ம நபர்கள் கைவரிசை
நாகை காடம்பாடியில் கோவில் உண்டியல் திருட்டு போனது. இந்த கோவிலில் 4-வது முறையாக மர்ம நபர்கள் கைவரிசை காட்டி உள்ளனர்.