அரியலூர் அரசு கலை-அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியது


அரியலூர் அரசு கலை-அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியது
x
தினத்தந்தி 15 May 2019 10:45 PM GMT (Updated: 15 May 2019 10:29 PM GMT)

அரியலூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2019-20-ம் கல்வி ஆண்டு மாணவ-மாணவிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது.

தாமரைக்குளம்,

அரியலூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2019-20-ம் கல்வி ஆண்டு மாணவ-மாணவிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது. இதனை கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ஜெயகுமார் தொடங்கி வைத்தார். அரியலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 13 இளங்கலை பாட பிரிவுகள் உள்ளன. இதில் இளங்கலை வணிகவியல், ஆங்கிலம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வு நேற்று நடைபெற்றது இதில் 750-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். இதில் கட்-ஆப் மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் ஆங்கில பாடப்பிரிவில் 50 மாணவ, மாணவிகளும், வணிகவியல் பாடப்பிரிவில் காலை, மாலை ஆகிய சுழற்சிகள் வகையில் 104 மாணவ, மாணவிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இன்று (வியாழக்கிழமை) இளங்கலை சுற்றுச்சூழல் அறிவியல் உள்ளிட்ட அனைத்து அறிவியல் பாடப்பிரிவுகளுக்கும், நாளை (வெள்ளிக்கிழமை) தமிழ், வரலாறு, பொருளியல் உள்ளிட்ட அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது. கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள் காலை 9 மணிக்கு பள்ளி மாற்று சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், சாதி சான்றிதழ் ஆகிய அனைத்து அசல் சான்றிதழ்கள் மற்றும் 5 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் ஆகியவற்றுடன் தங்களது பெற்றோர் அல்லது பாதுகாவலருடன் கல்லூரிக்கு வரவேண்டும், கல்லூரியில் இடம் பெறுவதற்காக யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். சேர்க்கைகள் அனைத்தும் தகுதி அடிப்படையிலேயே நடைபெறுகின்றன என்று கல்லூரி முதல்வர் ஜெயகுமார் தெரிவித்தார். 

Next Story