மாவட்ட செய்திகள்

இந்துக்களை சீண்டினால், கமல்ஹாசனின் 67 ஆண்டு திருவிளையாடல் மக்கள் முன்பு வைக்கப்படும் - எச்.ராஜா எச்சரிக்கை + "||" + With the Hindus, 67 years of Kamal Hassan Before people kept Thiruvilayadal

இந்துக்களை சீண்டினால், கமல்ஹாசனின் 67 ஆண்டு திருவிளையாடல் மக்கள் முன்பு வைக்கப்படும் - எச்.ராஜா எச்சரிக்கை

இந்துக்களை சீண்டினால், கமல்ஹாசனின் 67 ஆண்டு திருவிளையாடல் மக்கள் முன்பு வைக்கப்படும் - எச்.ராஜா எச்சரிக்கை
இந்துக்களை சீண்டினால் கமல்ஹாசனின் 67 ஆண்டு திருவிளையாடல்கள் மக்கள் முன்பு வைக்கப்படும் என்று பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா கூறினார். பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா, திண்டுக்கல்லில் உள்ள கட்சி நிர்வாகியின் வீட்டுக்கு வந்தார். அப்போது அவர், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
திண்டுக்கல்,

மகாத்மாகாந்தியின் படுகொலையை யாரும் நியாயப்படுத்த முடியாது. கோட்சே உள்ளிட்டோரை விடுதலை செய்ய வேண்டும் என்று யாராவது போராடினார்களா? ஆனால், ராஜீவ்காந்தியை கொன்றவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்கிறார்கள். யார் தீவிரவாதி. மகாத்மாகாந்தி படுகொலை முன்பு பயங்கரவாதமே இல்லையா?

மேற்குவங்காளத்தில் நவக்காளியில் ஏராளமான இந்துக்கள், சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். நெல்லை மேலப்பாளையத்தில் பாகிஸ்தான் கொடியை ஏற்றினார்கள். அதை பற்றி கமல்ஹாசன் பேசினாரா? கமல்ஹாசன் போன்று 67 வயது வரை பெண்களை அரைநிர்வாணமாக வைத்து படம் எடுத்து சம்பாதித்து விட்டு, அரசியலுக்கு வந்து வேடம் போடுபவன் அல்ல நான்.

நான் 7 வயதில் இருந்தே அரசியலில் இருக்கிறேன். மக்களுக்காக போராடி இருக்கிறேன். கமல்ஹாசன் ஒரு விஷச்செடி. முளையிலேயே அழிக்க வேண்டிய தீயசக்தி. மகாத்மாகாந்தி தென்ஆப்பிரிக்கா செல்லும் போது, தனது தாய்க்கு 3 உறுதிகளை கொடுத்தார். அதில் மது அருந்த மாட்டேன், மாமிசம் உண்ண மாட்டேன், பிற பெண்களை தவறாக பார்க்க மாட்டேன் என்றார். அவற்றை கடைபிடிக்காதவர், காந்தியின் கொள்ளுப்பேரனா?.

காந்தியின் கொள்ளுப்பேரனாகும் தகுதி எச்.ராஜாவுக்கு உண்டு. ஆனால், கமல்ஹாசனுக்கு இல்லை. மனைவிக்கோ, கணவருக்கோ ஒழுக்கமாக இல்லாதவர் மக்களிடம் நேர்மையாக இருக்க முடியாது. எனவே, ஒழுக்கம், நேர்மை இல்லாத கமல்ஹாசனின் கட்சிக்கு போடும் ஓட்டு நேர்மைக்கும், தூய்மைக்கும் வைக்கும் வேட்டு. கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே பள்ளப்பட்டியில் அவ்வாறு பேசியிருக்கிறார்.

எனவே, கமல்ஹாசன் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். இந்துக்களை அசிங்கப்படுத்த நினைத்தால், அவரை தோலுரித்து காட்டாமல் விடமாட்டோம். நல்லவர்கள், ஒழுக்கமானவர்கள் யாராவது கமல்ஹாசனை ஆதரிக்கிறார்களா? நான் உண்மையை கூறினால் சர்ச்சை என்பார்கள். பெரியாரை பற்றிய உண்மையை கூறினால் வரம்பு மீறுகிறார் என்கிறார்கள். கமல்ஹாசன் இந்துக்களை சீண்டுவதால் தான் அவரை பற்றி பேசுகிறேன்.முஸ்லிம், கிறிஸ்தவ மதத்துக்கு கொடுக்கும் மரியாதையை இந்து மதத்துக்கும் கொடுக்க வேண்டும். அது குறைந்தால் எதிர்வினை இருக்கும். இந்துக்களை சீண்டினால், கமல்ஹாசனின் 67 ஆண்டுகால திருவிளையாடல்கள் மக்கள் முன்பு வைக்கப்படும். அதற்கு 2 பேரை பற்றி கூறினாலே போதும். அவர்களுக்கு கமல்ஹாசன் நேர்மையாக நடந்தாரா? பச்சை தமிழன் என்று கூறிவிட்டு, மகளுக்கு ஸ்ருதி என்று பெயர் வைக்கிறார். இரட்டை வேடம் போடும் கமல்ஹாசனை மக்கள் நம்பக் கூடாது.

இவ்வாறு அவர் கூறினார். 

அதிகம் வாசிக்கப்பட்டவை