தென்னிந்திய இரட்டையர் இறகுப்பந்து போட்டியில் தர்மபுரி-கிருஷ்ணகிரி வீரர்கள் வெற்றி
தென்னிந்திய அளவிலான இறகுப்பந்து போட்டிகள் பெங்களூருவில் நடைபெற்றது.
தர்மபுரி,
தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றனர். ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில் இரட்டையர் பிரிவு இறகுப்பந்து போட்டியில் தர்மபுரியை சேர்ந்த நடராஜ், கிருஷ்ணகிரியை சேர்ந்த சிவக்குமார் ஆகியோர் முதலிடம் பிடித்தனர். தென்னிந்திய அளவிலான இறகுப்பந்து போட்டியில் வென்ற இவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இவர்களுக்கு தமிழகத்தை சேர்ந்த இறகுப்பந்து வீரர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
Related Tags :
Next Story