மாவட்ட செய்திகள்

பண பட்டுவாடாவை தடுக்க அரவக்குறிச்சி தொகுதியில் வாகன தணிக்கை தீவிரம் + "||" + Vehicle Audit intensity in Aravakurichi constituency to prevent cash withdrawal

பண பட்டுவாடாவை தடுக்க அரவக்குறிச்சி தொகுதியில் வாகன தணிக்கை தீவிரம்

பண பட்டுவாடாவை தடுக்க அரவக்குறிச்சி தொகுதியில் வாகன தணிக்கை தீவிரம்
பண பட்டுவாடாவை தடுக்க அரவக்குறிச்சி தொகுதியில் வாகன தணிக்கையில் பறக்கும் படையினர், நிலையாக நின்று ஆய்வு செய்யும் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
கரூர்,

கரூர் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் தளவாபாளையம் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டுள்ளன. வருகிற 19-ந்தேதி அரவக்குறிச்சி இடைத்தேர்தலுக்கு பிறகு, 23-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. இதையொட்டி வாக்கு எண்ணும் மையத்துக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணும் மையத்தில் ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, கட்டுப்பாட்டு அறையில் வைக்கப்பட்டுள்ள கணினி திரையில் பார்வையிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வாக்கு எண்ணும் மையத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விக்ரமன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது சுழற்சி முறையில் 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொள்வது பற்றியும், துப்பாக்கி ஏந்தியபடி துணை ராணுவம் பணியாற்றுவது குறித்தும் கேட்டறிந்தார். பின்னர் அரவக்குறிச்சி தொகுதியில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


வாகன தணிக்கை தீவிரம்

நாளை (வெள்ளிக்கிழமை) மாலையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவு பெற இருப்பதால், தேர்தல் விதிகளை மீறி வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய பணம் ஏதும் எடுத்து செல்லப்படுகிறதா? விலையுயர்ந்த பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா? என்பதை கண்காணிக்க பறக்கும் படை மற்றும் நிலையாக நின்று ஆய்வு செய்யும் குழுவினர் ஆங்காங்கே தீவிரமாக வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.வாகன தணிக்கையின் போது துப்பாக்கி ஏந்தியபடி நிற்கும் துணை ராணுவத்தினருடன் சேர்ந்தே அதிகாரிகள் வாகன தணிக்கை மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது ஆகும். மேலும் போலீஸ்துறை சார்பில் 29 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு கண் காணிக்கப்பட்டு வருகிறது.

பணம் வினியோகம்

இதைத்தவிர விதிகளை மீறி டோக்கன்கொடுப்பது உள்ளிட்ட நூதன முறையில் பணவினியோகம் யாரேனும் மேற்கொள்கின்றனரா? பகுதிவாரியாக பணம் கொடுக்க அரசியல் கட்சியினர் கணக்கீடு ஏதும் செய்கின்றனரா? என அரவக்குறிச்சி தொகுதியில் உளவு பிரிவினரும் தேர்தல் பிரசாரம் நடக்கும் இடங்கள் மற்றும் மக்கள் வசிக்கும் தெருக்களுக்கு நேரடியாக சென்று விசாரணை மேற்கொள்ளப்பட்டும் வருகிறது. ஏனெனில் கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கடைசி கட்டத்தில் சரமாரியாக அரவக்குறிச்சி தொகுதியில பட்டுவாடா செய்யப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையிலே தான் தேர்தல் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது ஆகும். இதனை கருத்தில் கொண்டும் தொகுதியில் சந்தேகத்திற்குரிய இடங்களை பார்வையிட்டும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இதை தவிர போலீசார் இருசக்கர வாகனங்களில் ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள். 

தொடர்புடைய செய்திகள்

1. தஞ்சை சட்டசபை, நாடாளுமன்ற தொகுதியில் 13 வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுது ஒப்புகை சீட்டுகள் எண்ணப்பட்டன
தஞ்சை சட்டசபை, நாடாளுமன்ற தொகுதியில் பயன்படுத்தப்பட்ட 13 வாக்குப்பதிவு எந்திரங் களில் பழுது ஏற்பட்டது. இதனால் அந்த வாக்குச்சாவடிகளில் வைக்கப்பட்டிருந்த விவிபாட் எந்திரத்தில் பதிவான ஒப்புகை சீட்டுகள் எண்ணப்பட்டன.
2. சேலம் நாடாளுமன்ற தொகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை
சேலம் நாடாளுமன்ற தொகுதியில் நேற்று வாக்கு எண்ணிக்கை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது.
3. தஞ்சையில் வெறிச்சோடிய வாக்கு எண்ணும் மையம் ஏராளமான போலீசார் குவிப்பு
தஞ்சையில் வாக்குச்சாவடி மையம் வெறிச்சோடி காணப்பட்டது. அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
4. அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் ஓட்டு எண்ணிக்கை தாமதம் அதிகாரிகளுடன், முகவர்கள் வாக்குவாதம்-பரபரப்பு
வாக்குப்பதிவு எந்திரங் களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தலில் ஓட்டு எண்ணும் பணியில் தாமதம் ஏற்பட்டது. இதனால் அதிகாரிகளுடன் முகவர்கள் வாக்குவாதத்தில் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
5. திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் வெறிச்சோடிய வாக்கு எண்ணிக்கை மையம்
திருச்சி நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை மையம் வெறிச்சோடி காணப்பட்டது. வெற்றியை கொண்டாட முடியாமல் தொண்டர்கள் தவித்தனர்.