மாவட்ட செய்திகள்

பிளஸ்-1 வகுப்பு சேர்க்கையை முடித்து விட்டு வீடு திரும்பிய போது விபத்து: மனைவி- மகள் உடல்நசுங்கி சாவு + "||" + The accident happened when the return of the plus-1 class combination ended up in the accident: wife-daughter's health and death

பிளஸ்-1 வகுப்பு சேர்க்கையை முடித்து விட்டு வீடு திரும்பிய போது விபத்து: மனைவி- மகள் உடல்நசுங்கி சாவு

பிளஸ்-1 வகுப்பு சேர்க்கையை முடித்து விட்டு வீடு திரும்பிய போது விபத்து: மனைவி- மகள் உடல்நசுங்கி சாவு
பிளஸ்-1 வகுப்பு சேர்க்கையை முடித்து விட்டு வீடு திரும்பிய போது நடந்த விபத்தில் மனைவி- மகள் உடல்நசுங்கி பரிதாபமாக இறந்தனர். டிரைவர் கண்முன்னே இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.
நாகர்கோவில்,

நாகர்கோவிலை அடுத்த மேலசங்கரன்குழி சாந்தபுரத்தைச் சேர்ந்தவர் நாககிருஷ்ணமணி (வயது 49). இவர் நாகர்கோவில் ராணித்தோட்டம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் டிரைவராக உள்ளார். இவருடைய மனைவி சுதா (42). இவர்களது மகள் ஸ்ரீபத்மபிரியா (16). இவர் 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார்.


எனவே மகளை பிளஸ்-1 வகுப்பில் சேர்ப்பதற்காக கணவன்- மனைவி இருவரும் ஸ்ரீபத்மபிரியாவை அழைத்துக் கொண்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு பள்ளிக்கு நேற்று காலை மோட்டார் சைக்கிளில் வந்தனர். பள்ளியில் பிளஸ்-1 வகுப்பு சேர்க்கை முடிந்ததும் அதே மோட்டார் சைக்கிளில் அவர்கள் வீட்டுக்கு புறப்பட்டனர்.

விபத்து

அப்போது மோட்டார் சைக்கிளை நாககிருஷ்ணமணி ஓட்டினார். அவருக்கு பின்னால் மகள் ஸ்ரீபத்மபிரியா மற்றும் மனைவி சுதா ஆகியோர் அமர்ந்திருந்தனர். அவர்கள் கேப் ரோட்டில் கணேசபுரம் திருப்பம் அருகில் சென்றனர். அப்போது அங்குள்ள ஒரு லாட்ஜ் முன்னால் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த காரின் டிரைவர் திடீரென்று கார் கதவை திறந்ததாக கூறப்படுகிறது. இதை சற்றும் எதிர்பாராத நாககிருஷ்ணமணி மோட்டார் சைக்கிளுடன் கார் கதவில் மோதினார்.

மோட்டார் சைக்கிளில் இருந்து 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். அவர்களில் ஸ்ரீபத்ம பிரியாவும், சுதாவும் நடுரோட்டில் விழுந்தனர். நாககிருஷ்ணசாமி சாலையோரத்தில் விழுந்தார். அந்த வழியாக பறக்கை நோக்கி சென்ற மினி பஸ் ரோட்டில் விழுந்து கிடந்த தாய் மற்றும் மகள் மீது ஏறி இறங்கியது. இதில் தலை மற்றும் உடல் நசுங்கிய ஸ்ரீபத்மபிரியாவும், சுதாவும் ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்தனர். நாககிருஷ்ணமணி கீழே விழுந்ததில் இடதுகால் தொடைப்பகுதியில் பலத்த காயம் அடைந்தார். கண் இமைக்கும் நேரத்தில் இந்த விபத்து நடந்து முடிந்தது.

பெரும் சோகம்

அக்கம் பக்கத்தில் இருந்தவர்களும், தகவல் அறிந்து விரைந்து வந்த போக்குவரத்து புலனாய்வுப்பிரிவு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயராஜன், சசீதரன் ஆகியோரும் சேர்ந்து படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய 3 பேரையும் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே சுதா, ஸ்ரீபத்மபிரியா ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். நாககிருஷ்ணமணி தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது கண் முன்னே மனைவியும், மகளும் விபத்தில் சிக்கி இறந்ததை அறிந்து கதறி அழுதது ஆஸ்பத்திரியில் இருந்தவர்களை கண்கலங்க செய்தது.

சென்னை பதிவெண் கொண்ட கார்

விபத்தில் இறந்த தாய், மகள் உடல்களை போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மினிபஸ் டிரைவரான புத்தளம் அருகே உள்ள கல்லடிவிளையைச் சேர்ந்த சுகுமாரன் மீது நாகர்கோவில் போக்குவரத்து புலனாய்வுப்பிரிவு இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பெர்னார்டு சேவியர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விபத்துக்கு காரணமான சென்னை பதிவெண் கொண்ட காரையும், காரை ஓட்டி வந்த டிரைவரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

பிளஸ்-1 வகுப்பில் சேர்க்கையை முடித்து விட்டு வீடு திரும்பிய போது நடந்த இந்த பரிதாப சம்பவம் நாகர்கோவிலில் நேற்று பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. கோபி அருகே பரிதாபம்: மின்சாரம் தாக்கி பாலிடெக்னிக் மாணவர் சாவு
கோபி அருகே மின்சாரம் தாக்கி பாலிடெக்னிக் மாணவர் ஒருவர் பரிதாபமாக இறந்தார்.
2. விபத்தில் சிக்கியவர்களை மீட்க சென்ற ஆம்புலன்ஸ் டிரைவர் டிராக்டர் மோதி சாவு
பரமத்தி வேலூர் அருகே, விபத்தில் சிக்கியவர்களை மீட்க சென்ற ஆம்புலன்ஸ் டிரைவர் டிராக்டர் மோதி பரிதாபமாக இறந்தார்.
3. வாணாபுரம் அருகே, பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்த பிளஸ்-2 மாணவர் மயங்கி விழுந்து சாவு
வாணாபுரம் அருகே பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்த பிளஸ்-2 மாணவர் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். பள்ளி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெற்றோர், உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
4. செங்கிப்பட்டி அருகே பரிதாபம்: மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; பொக்லைன் ஆபரேட்டர்கள் 2 பேர் பலி
செங்கிப்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் பொக்லைன் ஆபரேட்டர்கள் 2 பேர் பரிதாபமாக பலியானார்கள். சாப்பாடு வாங்க சென்றபோது இவர்களுக்கு இந்த துயர சம்பவம் நேர்ந்தது.
5. திண்டுக்கல், மோட்டார்சைக்கிள் - கார் மோதல் : 2 பேர் படுகாயம்
திண்டுக்கலில், மோட்டார்சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் படுகாயமடைந்தனர்.