மாவட்ட செய்திகள்

சம்பளம் வழங்கக்கோரி பாசிக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் + "||" + Request a salary pasic staff demonstration

சம்பளம் வழங்கக்கோரி பாசிக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சம்பளம் வழங்கக்கோரி பாசிக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
சம்பளம் வழங்கக்கோரி பாசிக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி,

புதுவை அரசு நிறுவனமான பாசிக்கில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 57 மாதத்துக்கான சம்பளம் நிலுவையில் உள்ளது. இந்த சம்பளத்தை வழங்கக்கோரி பாசிக் ஊழியர்கள் முன்னேற்ற சங்கத்தினர் (ஏ.ஐ.டி.யு.சி.) பல்வேறுகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அவர்கள் 5 மாத சம்பளத்தையாவது உடனடியாக வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பாசிக் தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு சங்க தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார்.

ஏ.ஐ.டி.யு.சி. மாநில தலைவர் அபிஷேகம், பொதுச்செயலாளர் தினேஷ் பொன்னையா, பாசிக் சங்க கவுரவ தலைவர் சேதுசெல்வம் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். ஆர்ப்பாட்டத்தில் சங்க செயலாளர் முத்துராமன், பொருளாளர் தரணிராஜா, துணை செயலாளர்கள் கோவிந்தராஜ், மூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

57 மாதமாக சம்பளம் வழங்கப்படாததால் தங்கள் பிள்ளைகளை பள்ளி மற்றும் கல்லூரிகளில் சேர்க்க பணம் இல்லாமல் கஷ்டப்படுவதாக ஆர்ப்பாட்டத்தின்போது ஊழியர்கள் தெரிவித்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. அம்பேத்கர் சிலை உடைப்புக்கு கண்டனம் தெரிவித்து செந்துறையில் ஆர்ப்பாட்டம் நடத்திய 26 பேர் கைது
அம்பேத்கர் சிலை உடைப்புக்கு கண்டனம் தெரிவித்து செந்துறையில் ஆர்ப்பாட்டம் நடத்திய 26 பேர் கைது தா.பழூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறியல்.
2. ஊழியர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து, மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் அடைப்பு
ஊழியர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் நேற்று அடைக்கப்பட்டன. அத்துடன் டாஸ்மாக் அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பினர் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
3. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் திருப்பூர் குமரன் சிலை முன்பு நடைபெற்றது.
4. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து, ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தடையை மீறி ஆர்ப்பாட்டம் - 23 பேர் கைது
காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததற்கு கண்டனம் தெரிவித்து சேலத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 23 பேரை போலீசார் கைது செய்தனர்.
5. மடத்துக்குளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
மடத்துக்குளம் நால்ரோடு பகுதியில் மார்க்ஸ்சிட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதிகம் வாசிக்கப்பட்டவை