மாவட்ட செய்திகள்

ரூ.63 லட்சம் செலவில் கோர்க்காடு ஏரி தூர்வாரும்பணி; அமைச்சர் கந்தசாமி நேரில் ஆய்வு + "||" + At Rs 63 lakh Korkkatu Lake Dredged work; Minister Kandasamy studied in live

ரூ.63 லட்சம் செலவில் கோர்க்காடு ஏரி தூர்வாரும்பணி; அமைச்சர் கந்தசாமி நேரில் ஆய்வு

ரூ.63 லட்சம் செலவில் கோர்க்காடு ஏரி தூர்வாரும்பணி; அமைச்சர் கந்தசாமி நேரில் ஆய்வு
கோர்க்காடு ஏரி ரூ.63 லட்சம் செலவில் தூர்வாரப்படுகிறது. இந்த பணிகளை அமைச்சர் கந்தசாமி நேரில் ஆய்வு செய்தார்.
வில்லியனூர்,

புதுவை மாநிலத்தில் 84 ஏரிகள் உள்ளன. மத்திய அரசு நிதி மூலம் இந்த ஏரிகள் தூர் வாரப்படுகிறது. இதுவரை 17 ஏரிகள் தூர்வாரப்பட்டுள்ளன. ஏம்பலம் தொகுதி கோர்க்காடு கிராமத்தில் உள்ள ஏரியை தூர்வாரி, கரைகளை பலப்படுத்தி சுற்றுலா தலம் அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.


இதைத்தொடர்ந்து ரூ.63 லட்சம் செலவில் கோர்க்காடு ஏரியை தூர்வாரி கரைகளை பலப்படுத்தி சுற்றுலா தலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. நேற்று அமைச்சர் கந்தசாமி அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்களுடன் இது தொடர்பாக ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது பொதுப்பணித் துறை செயலர் பார்த்திபன், தலைமை பொறியாளர் சிவலிங்கம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறை பொறியாளர் காளமேகம் சுற்றுலா துறை இயக்குனர் முகமது மன்சூர், நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் மனோகரன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

அப்போது அதிகாரிகளிடம் உடனடியாக ஏரியை தூர்வாரி கரைகளை பலப்படுத்தும்படி உத்தரவிட்டார். மேலும் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், பணிகளை துரிதப்படுத்தவும் வருவாய் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட சொன்னார். தொடர்ந்து பொதுப்பணித்துறை செயலர் பார்த்திபன் கூறுகையில், நீர்நிலைகளை பாதுகாக்க இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே அதனை முழுமையாக பயன்படுத்தி நிலத்தடி நீரை உயர்த்தவும், மழை நீரை சேமிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஒரு வாரத்திற்குள் இதுவரை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் அறிக்கையை தாக்கல் செய்யப்படும் என்றார். இந்த ஆய்வின் போது ஊர் பொதுமக்கள் சார்பில் அறங்காவலர் குழு தலைவர் வெங்கடேசன் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கவர்னர் தனது செயல்பாடுகளை மாற்றாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க நேரிடும் - நாராயணசாமி பேட்டி
கவர்னர் தனது செயல்பாட்டை மாற்றிக்கொள்ளவில்லை என்றால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க நேரிடும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
2. பல வே‌ஷமிட்டு நடித்தாலும் மு.க.ஸ்டாலினால் முதல்–அமைச்சராக முடியாது - ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
பல வே‌ஷமிட்டு நடித்தாலும் மு.க.ஸ்டாலினால் ஒருபோதும் முதல்–அமைச்சராக முடியாது என்று துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
3. அரசியல் சுய லாபத்துக்காக, ராஜீவ்காந்தி பற்றி விமர்சிப்பதா? அமைச்சர் நமச்சிவாயம் கண்டனம்
அரசியல் சுய லாபத்துக்காக ராஜீவ்காந்தி பற்றி விமர்சிப்பதா? என்று அமைச்சர் நமச்சிவாயம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
4. குடும்ப உறவினை தாண்டி அன்பு உருவாக வேண்டும் அமைச்சர் நமச்சிவாயம் விருப்பம்
குடும்ப உறவினை தாண்டி அன்பு உருவாக வேண்டும் என்று அமைச்சர் நமச்சிவாயம் விருப்பம் தெரிவித்தார்.
5. சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்ள தயார் - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
சபாநாயகர் மீது தி.மு.க. கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர் கொள்ள தயாராக உள்ளோம் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.