மாவட்ட செய்திகள்

கல்யாணில் தீ விபத்து 30 குடோன்கள் எரிந்து நாசம் + "||" + Fire accident in Kalyan 30 Gudons burned down

கல்யாணில் தீ விபத்து 30 குடோன்கள் எரிந்து நாசம்

கல்யாணில் தீ விபத்து 30 குடோன்கள் எரிந்து நாசம்
கல்யாணில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 30 குடோன்கள் எரிந்து நாசமானது.
தானே,

தானே மாவட்டம் கல்யாண் சீல்பாட்டா பகுதியில் பழைய பொருட்கள் வைக்கும் குடோன்கள் உள்ளது. நேற்று அந்த குடோன் அருகே குவித்து வைக்கப்பட்டு இருந்த பிளாஸ்டிக் குப்பைகள் திடீரென தீப்பிடித்து எரிந்தன.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர் கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்ற னர். அவர்களால் தீயை அணைக்க முடியவில்லை. சிறிது நேரத்தில் தீ மளமளவென எரிந்து அங்குள்ள குடோன்களுக்கு பரவியது.


இதையடுத்து அவர்கள் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு படையினர் 8 வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அதற்குள் தீ அங்குள்ள ஏராளமான குடோன்களில் பரவி கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. அந்த பகுதியே கரும்புகை மண்டலமாக காட்சி அளித்தது.

தீயணைப்பு படையினர் நாலாபுறமும் சுற்றி நின்றபடி தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க போராடினார்கள். சுமார் 3 மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ விபத்தில் 30 குடோன்கள் தீயில் எரிந்து நாசமானது. மேலும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சில வாகனங்களும் தீக்கிரையாகின. இந்த தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர்.

தொடர்புடைய செய்திகள்

1. சமையல் செய்ய ஸ்டவ் அடுப்பை பற்ற வைத்தபோது - தீக்காயம் அடைந்த புதுப்பெண் உள்பட 2 பேர் சாவு
சமையல் செய்ய ஸ்டவ் அடுப்பை பற்ற வைத்தபோது தீக்காயம் அடைந்த புதுப்பெண் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
2. சுசீந்திரத்தில், பேராசிரியை வீட்டில் தீ விபத்து; ரூ.20 லட்சம் பொருட்கள் சேதம்
சுசீந்திரத்தில் பேராசிரியை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 20 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. மேலும், தீயணைப்பு பணியில் ஈடுபட்ட 2 வீரர்கள் காயமடைந்தனர்.
3. மகாராஷ்டிர மாநிலம் துலேவில் உள்ள தொழிற்சாலையில் தீவிபத்து 8 பேர் பலி?
மகாராஷ்டிர மாநிலம் துலேவில் உள்ள தொழிற்சாலையில் தீவிபத்து ஏற்பட்டது. இதில் 8 பேர் பலியாகி இருக்கலாம் என முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
4. அஜித் பவாரின் பண்ணை வீட்டில் பயங்கர தீ
புனே அருகே அஜித் பவாரின் பண்ணை வீட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில்,அங்குள்ள கொட்டகை எரிந்து நாசமானது.
5. மூங்கில்துறைப்பட்டு அருகே, தீ விபத்தில் 4 கூரை வீடுகள் எரிந்து சாம்பல் - ரூ.7 லட்சம் சேதம்
மூங்கில்துறைப்பட்டு அருகே ஏற்பட்ட தீ விபத்தில் 4 கூரை வீடுகள் எரிந்து சாம்பலானது. இதில் ரூ.7 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதமானது.