மாவட்ட செய்திகள்

திருவள்ளூர் அருகே கொதிக்கும் எண்ணெயில் தவறி விழுந்த சிறுமி சாவு + "||" + Near Thiruvallur Boiling oil Fallen girl died

திருவள்ளூர் அருகே கொதிக்கும் எண்ணெயில் தவறி விழுந்த சிறுமி சாவு

திருவள்ளூர் அருகே கொதிக்கும் எண்ணெயில் தவறி விழுந்த சிறுமி சாவு
திருவள்ளூர் அருகே கொதிக்கும் எண்ணெயில் தவறி விழுந்த சிறுமி பரிதாபமாக இறந்தார்.
திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த வெங்கல் அருகே உள்ள செதில்பாக்கத்தை சேர்ந்தவர் கோபி (வயது 30). இவர் கடந்த மாதம் 18-ந்தேதியன்று கோடை விடுமுறையையொட்டி தனது மனைவி மற்றும் 3 மகள்களை திருவள்ளூரை அடுத்த போளிவாக்கத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.


அங்கு கோபியின் 4 வயது குழந்தை பவித்ரா கடந்த 10-ந் தேதியன்று வீட்டின் அருகே சிறுவர்களுடன் விளையாடி கொண்டிருந்தார். அப்போது அங்கு வடை சுடப்பட்டது. கொதிக்கும் எண்ணெயில் பவித்ரா தவறி விழுந்து விட்டார்.

இதில் அவர் படுகாயம் அடைந்தார். இதை பார்த்த வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சிறுமி பவித்ரா நேற்று முன்தினம் சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக இறந்து போனார்.

இது குறித்து மணவாளநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. திருவள்ளூர் அருகே மாடி படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சாவு
திருவள்ளூர் அருகே மாடி படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
2. ஆவடி அருகே 70 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் காப்பாற்ற முயன்ற முதியவரும் உள்ளே விழுந்து தவிப்பு
ஆவடி அருகே, 70 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த 7 வயது சிறுவன் மற்றும் அவரை காப்பாற்ற முயன்று உள்ளே தவறி விழுந்து வெளியேற முடியாமல் தவித்த முதியவர் இருவரையும் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை