அதியமான்கோட்டை காலபைரவர் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.8¾ லட்சம் வருவாய்


அதியமான்கோட்டை காலபைரவர் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.8¾ லட்சம் வருவாய்
x
தினத்தந்தி 16 May 2019 11:00 PM GMT (Updated: 16 May 2019 3:52 PM GMT)

அதியமான்கோட்டை காலபைரவர் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.8¾ லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.

தர்மபுரி, 

தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டையில் பிரசித்தி பெற்ற தட்சணகாசி காலபைரவர் கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவிலில் மாதந்தோறும் தேய்பிறை அஷ்டமியையொட்டி நடக்கும் சிறப்பு வழிபாட்டில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை சேர்ந்த பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்துகிறார்கள். இதேபோன்று வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் ராகுகால பூஜை நடக்கிறது. இந்த பூஜையிலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்துகிறார்கள்.

காலபைரவர் கோவிலில் உள்ள உண்டியல்கள் 3 மாதத்திற்கு ஒரு முறை திறக்கப்பட்டு பணம் எண்ணப்படுவது வழக்கம். அதன்படி நேற்று கோவில் உண்டியலில் இருந்த பணத்தை எண்ணும் பணி நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் நித்யா, நகைமதிப்பீடு உதவி ஆணையர்குமரேசன், ஆய்வாளர் இந்திரா, செயல்அலுவலர் சித்ரா, அர்ச்சகர் கிருபாகரன் ஆகியோர் முன்னிலையில் கோவில் வளாகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டன.

இந்த உண்டியல்களை எண்ணும் பணியில் கோவில் பணியாளர்கள், சிவபக்தர்கள் ஈடுபட்டனர். உண்டியலில் இருந்த ரூபாய் நோட்டுகள் மற்றும் சில்லரை காசுகள் எண்ணப்பட்டன. இந்த பணி கேமரா மூலம் பதிவு செய்யப்பட்டு கண்காணிக்கப்பட்டது. இதேபோல் போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த பணியின் முடிவில் மொத்தம் ரூ.8 லட்சத்து 90 ஆயிரத்து 81 உண்டியலில் இருந்தது. மேலும் 9 கிராம் தங்ககாசுகளும், 62 கிராம் வெள்ளியும் உண்டியலில் இருந்தன. இவை அனைத்தும் கோவில் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டன.

Next Story