பெரியூர் மலைகிராமத்தில் மின்னல் தாக்கி 50 ஆடுகள் செத்தன


பெரியூர் மலைகிராமத்தில் மின்னல் தாக்கி 50 ஆடுகள் செத்தன
x
தினத்தந்தி 16 May 2019 10:15 PM GMT (Updated: 16 May 2019 6:49 PM GMT)

பாப்பாரப்பட்டி அருகே உள்ள பெரியூர் மலை கிராமத்தில் மின்னல் தாக்கியதில் 50 ஆடுகள் பரிதாபமாக செத்தன.

பாப்பாரப்பட்டி, 

பென்னாகரம் தாலுகா பிக்கிலி ஊராட்சிக்குட்பட்ட பெரியூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி(வயது 50). விவசாயி. இவருக்கு பெரியூர் கிராமத்தில் வனப்பகுதியையொட்டி சுமார் ஒரு ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. மேலும் அவர் 50 வெள்ளாடுகளை வளர்த்து வந்தார். வனப்பகுதியையொட்டி உள்ள பகுதிகளில் அவர் ஆடுகளை மேய்ப்பது வழக்கம்.

இந்த நிலையில் பெரியூர் பகுதியில் நேற்று முன்தினம் பலத்த காற்று வீசியது. மேலும் இடி-மின்னலுடன் மழைபெய்தது. இதன்காரணமாக சின்னசாமி தனது ஆடுகளை அருகில் இருந்த பாறை மீது நிறுத்திவிட்டு பக்கத்தில் ஒரு கல் இடுக்கில் மழைக்கு ஒதுங்கி நின்றார்.

அப்போது அந்த பகுதியில் திடீரென மின்னல் தாக்கியது. அதில் பாறை பகுதியில் நின்றிருந்த 50 ஆடுகளும் பரிதாபமாக செத்தன. மழை நின்ற பிறகு அங்கு சென்ற சின்னசாமி ஆடுகள் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய்த்துறையினர் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்கள். பின்னர் இறந்த ஆடுகளை அந்த பகுதியில் உள்ள நிலத்தில் குழி தோண்டி புதைத்தனர்.

Next Story