மாவட்ட செய்திகள்

கடையின் மேற்கூரையை உடைத்து செல்போன்கள்-பணம் திருட்டு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு + "||" + Selling the roof of the store and cell phones - money laundering for the mysterious people

கடையின் மேற்கூரையை உடைத்து செல்போன்கள்-பணம் திருட்டு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

கடையின் மேற்கூரையை உடைத்து செல்போன்கள்-பணம் திருட்டு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
கீழ்வேளூர் அருகே கடையின் மேற்கூரையை உடைத்து செல்போன்கள்-பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கீழ்வேளூர்,

நாகை அருகே கீழ்வேளூரை அடுத்த தேவூர் மெயின் சாலையை சேர்ந்தவர் ஆசிக் முகமது. இவர் தேவூர் சந்தைப்பேட்டையில் செல்போன் மற்றும் காலணி கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு வழக்கம் போல் ஆசிக் முகமது கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். இந்த நிலையில் நேற்று முன்தினம் கடையை திறக்க ஆசிக் முகமது வந்தார். அப்போது மேற்கூரையின் ஆஸ்பெட்டாஸ் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் கடையின் உள்ளே சென்று பார்த்த போது கல்லாவில் வைத்திருந்த ரூ.48 ஆயிரம், 2 செல்போன்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.


மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

இதுகுறித்து ஆசிக்முகமது கீழ்வேளூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணம் மற்றும் செல்போன்களை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கன்னியாகுமரியில் திருட்டு போன கார் மீட்பு; 2 பேர் கைது
கன்னியாகுமரியில் திருட்டு போன கார் மீட்கப்பட்டது. இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
2. கிளப்பில் பணம் வைத்து சூதாட்டம்: பிடிக்கச்சென்ற போலீஸ் அதிகாரிகளை கத்தியை காட்டி மிரட்டிய 17 பேர் கைது
திருப்பூரில் கிளப்பில் பணம் வைத்து சூதாடியவர்களை பிடிக்கச்சென்ற போலீஸ் அதிகாரிகளை கத்தியை காட்டி மிரட்டிய 17 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 7 இருசக்கர வாகனங்கள், பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
3. திருக்கோவிலூரில், வேளாண்மை அதிகாரி வீட்டில் பணம்-நகை கொள்ளை - போலீசார் விசாரணை
திருக்கோவிலூரில் வேளாண்மை அதிகாரி வீட்டில் பணம் மற்றும் நகை கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
4. திருச்சியில் பட்டப்பகலில் துணிகரம்: வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை தாக்கி நகை-பணம் கொள்ளை
திருச்சியில் பட்டப்பகலில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை தாக்கி நகை-பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்கள் அங்கு இருந்த காரையும் ஓட்டிச் சென்றனர்.
5. ஊழல் என்றாலே காங்கிரஸ்தான்: திருடுவதில் ராகுல் வல்லவர்- பா.ஜனதா பதிலடி
ஊழல் என்றாலே காங்கிரஸ்தான் என்றும், திருடுவதில் ராகுல் வல்லவர் என்றும் பா.ஜனதா சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அதிகம் வாசிக்கப்பட்டவை