மாவட்ட செய்திகள்

வேலாயுதம்பாளையம் பிரசார கூட்டத்தில் கமல்ஹாசன் மீது செருப்புகள்-முட்டை வீச்சு + "||" + Slippers-egg delivery on Kamal Hassan at Velayuthamalayam campaign

வேலாயுதம்பாளையம் பிரசார கூட்டத்தில் கமல்ஹாசன் மீது செருப்புகள்-முட்டை வீச்சு

வேலாயுதம்பாளையம் பிரசார கூட்டத்தில் கமல்ஹாசன் மீது செருப்புகள்-முட்டை வீச்சு
வேலாயுதம்பாளையத்தில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற கமல்ஹாசன் மீது செருப்புகள் மற்றும் முட்டை வீசப்பட்டன.
கரூர்,

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலையொட்டி மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொண்டார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அவர் பிரசாரத்தில் ஈடுபட்டு பேசியபோது, சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று குறிப்பிட்டார்.


அவருடைய கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் வலுத்து வருகிறது. இதற்கிடையே கடந்த திங்கட்கிழமையன்று அவர் பிரசாரத்தை ரத்து செய்தார்.

இந்நிலையில் நேற்று கமல்ஹாசன் மீண்டும் அரவக்குறிச்சி தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அவர் இரவு 9.48 மணியளவில் வேலாயுதம்பாளையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு வந்தார். அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் நின்றவாறு அவர் சுமார் 7 நிமிடங்கள் பேசினார். பின்னர் பேச்சை முடித்துக்கொண்டு அவர் கீழே இறங்க முயன்றபோது, மேடையை நோக்கி 2 செருப்புகள் அடுத்தடுத்து வீசப்பட்டன. மேலும் முட்டையும் வீசப்பட்டது. அவை மேடையில் வந்து விழுந்தன. கமல்ஹாசன் மீது படவில்லை. இதையடுத்து அவர் மேடையில் இருந்து இறங்கி, காரில் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

இதைக்கண்ட மக்கள் நீதிமய்யம் கட்சியினர் ஒருவரை பிடித்து தாக்கினார்கள். இதையடுத்து அவர்களை போலீசார் மீட்டனர். போலீசார் நடத்திய விசாரணையில், 3 பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதும், அதில் 2 பேர் தப்பிவிட்டதும் தெரியவந்தது. மேலும் மேடை மீது செருப்பு வீசியவர் பா.ஜ.க.வை சேர்ந்த ராமச்சந்திரன் என்பது தெரியவந்தது. இதையடுத்து கட்சி நிர்வாகியும், சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளருமான சினேகன் தலைமையில் மக்கள் நீதிமய்யம் கட்சியினர் மோடிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

இது பற்றி தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விக்ரமன் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் ஒலி பெருக்கி மூலம், உங்கள் கோபம் நியாயமானது. உங்கள் உணர்வுகளை மதிக்கிறேன். நாங்களும், நீங்களும் ஒரே அணியில்தான் இருக்கிறோம். எனவே எங்கள் பணியை செய்ய விடுங்கள். உங்கள் கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்று கூறினார். இதை ஏற்று மக்கள் நீதிமய்யம் கட்சியினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதற்கிடையே பிடிபட்ட 2 பேரை, மக்கள் நீதிமய்யம் கட்சியினர் தாக்கியபோது, அதை புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க பத்திரிகையாளர்கள் அங்கு சென்றனர். அப்போது போலீசார் அவர்களை தாக்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. ‘அரசியல் என்னுடைய தொழில் அல்ல’ கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி
தேர்தல் முடிவுகள் ஊக்கத்தை தந்திருப்பதாகவும், அரசியல் தன்னுடைய தொழில் அல்ல என்றும் கமல்ஹாசன் பரபரப்பாக பேசினார்.
2. தேர்தல் தோல்வியால் எங்களுக்கு ஏமாற்றம் இல்லை -கமல்ஹாசன்
தேர்தல் தோல்வியால் எங்களுக்கு ஏமாற்றம் எதுவும் இல்லை என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
3. மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசனுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியது உயர் நீதிமன்ற கிளை
மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசனுக்கு, மதுரை உயர்நீதிமன்ற கிளை நிபந்தனை முன் ஜாமீன் வழங்கியது.
4. அரவக்குறிச்சி தொகுதியில் பணப்பட்டுவாடா தொடங்கி விட்டது தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளுமா? கமல்ஹாசன் கேள்வி
அரவக்குறிச்சி தொகுதியில் பணப்பட்டுவாடா தொடங்கி விட்டது. இதை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளுமா? என கமல்ஹாசன் தேர்தல் பிரசாரத்தில் கேள்வி எழுப்பினார்.
5. கமல்ஹாசன் பிரசாரத்திற்கு தடை விதிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு
கமல்ஹாசன் பிரசாரத்திற்கு தடை விதிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது.