மாவட்ட செய்திகள்

உத்தமபாளையம் அருகே, சிறுமியை திருமணம் செய்ய விரும்பிய வாலிபர் விஷம் குடித்து தற்கொலை + "||" + Wishing to marry the girl The young men drank poison suicide

உத்தமபாளையம் அருகே, சிறுமியை திருமணம் செய்ய விரும்பிய வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

உத்தமபாளையம் அருகே, சிறுமியை திருமணம் செய்ய விரும்பிய வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
உத்தமபாளையம் அருகே சிறுமியை திருமணம் செய்ய விரும்பிய வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
உத்தமபாளையம்,

உத்தமபாளையம் அருகே உள்ள அனுமந்தன்பட்டி ஆர்.சி.கிழக்கு தெருவை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் அந்தோணியார் (வயது27). கூலிவேலை செய்து வந்தார். இவர் அந்தப் பகுதியில் உள்ள ஒரு சிறுமியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் அந்த சிறுமியை திருமணம் செய்ய விரும்பி பெற்றோருடன் அவரது வீட்டுக்கு, பெண் கேட்டு சென்றார்.

இதற்கு சிறுமியின் பெற்றோர் அவர் இன்னும் திருமண வயதை எட்டவில்லை என்று கூறியதாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த அந்தோணியார் நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது விஷம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்தார். இதையடுத்து அவரை உடனடியாக அக்கம்பக்கத்தினர் மீட்டு உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக் காக கொண்டு வந்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை