மாவட்ட செய்திகள்

காஞ்சீபுரம் குடிநீர் வழங்காததை கண்டித்து நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு மறியல் + "||" + Kancheepuram Condemned drinking water Siege of the municipal office

காஞ்சீபுரம் குடிநீர் வழங்காததை கண்டித்து நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு மறியல்

காஞ்சீபுரம் குடிநீர் வழங்காததை கண்டித்து நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு மறியல்
மதுராந்தகம் நகராட்சியில் சரிவர குடிநீர் வழங்காததை கண்டித்து நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுராந்தகம்,

காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகம் நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. அந்த பகுதி பொதுமக்களுக்கு ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீர் வழங்கப்படுகிறது. அதுவும் 2 நாட்களாக குடிநீர் வழங்கப்படவில்லை.

இதனை கண்டித்து 100–க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு அலுவலகம் எதிரே ஜி.எஸ்.டி. சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த மதுராந்தகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை உள்ளிட்ட போலீசார் பொதுமக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் சரிவர வழங்கப்படும் என்று உறுதி அளித்தனர். மேலும் நகராட்சி அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதனால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. காஞ்சீபுரம், திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர்கள் ஓட்டு விவரம்
காஞ்சீபுரம், திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்கள் பெற்ற ஓட்டு விவரம் வெளியானது.
2. காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம்
காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் நடந்தது.
3. காஞ்சீபுரம் ஓட்டு எண்ணும் பணிகள் குறித்து தேர்தல் பணியாளர்களுக்கான பயிற்சி கலெக்டர் தலைமையில் நடந்தது
ஓட்டு எண்ணும் பணிகள் குறித்து தேர்தல் பணியாளர்களுக்கான பயிற்சி கலெக்டர் பொன்னையா தலைமையில் நடந்தது.
4. முறைகேடு புகார் காரணமாக காஞ்சீபுரம் பட்டு கைத்தறி சங்கத்தலைவர் நீக்கம்
முறைகேடு புகார் காரணமாக காஞ்சீபுரம் அறிஞர் அண்ணா பட்டு கைத்தறி சங்கத்தலைவர் செல்வராஜ் நீக்கம் செய்யப்பட்டார்.
5. காஞ்சீபுரம், திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதிகளில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்
காஞ்சீபுரம், திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதிகளில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.