மாவட்ட செய்திகள்

கல்லூரி வாகனங்களை பள்ளிகளில் இயக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது கலெக்டர் உமா மகேஸ்வரி பேட்டி + "||" + District Uma Maheswari interview has been banned in the schools for college vehicles

கல்லூரி வாகனங்களை பள்ளிகளில் இயக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது கலெக்டர் உமா மகேஸ்வரி பேட்டி

கல்லூரி வாகனங்களை பள்ளிகளில் இயக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது கலெக்டர் உமா மகேஸ்வரி பேட்டி
புதுக்கோட்டை மாவட் டத்தில் கல்லூரி வாக னங்களை பள்ளி வாக னங்களாக இயக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது என்று கலெக்டர் உமா மகேஸ்வரி கூறினார்.
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், அனைத்து பள்ளி வாகனங்களில் மேற்கொள்ளப் பட்டு உள்ள பாதுகாப்பு வசதிகள் குறித்து ஆய்வு நேற்று புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, இலுப்பூர், அறந்தாங்கி ஆகிய பகுதிகளில் நடைபெற்றது. இதில் புதுக் கோட்டை வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்கு உட்பட்ட பள்ளி வாகனங்கள் புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் ஆய்வு செய்யப்பட்டது.


பள்ளி வாகனங்களில் மேற்கொள்ளப்பட்டு உள்ள பாதுகாப்பு வசதிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்ததை கலெக்டர் உமா மகேஸ்வரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். அப்போது பள்ளி வாகனங்களில் மேற் கொள்ளப்பட்டு உள்ள வேகக் கட்டுப்பாட்டு கருவிகள் பொருத்துதல், தீயணைப்புக் கருவி, முதலுதவிப்பெட்டி, டயர், சீட், கண்ணாடி, பிரேக், ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டுதல் போன்ற பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வின்போது துணை போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) ராதாஜெய லெட்சுமி, வட்டார போக்கு வரத்து அதிகாரி கார்த்தி கேயன், துணை போக்குவரத்து ஆணையர் உதயகுமார், மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தாமரை உள்பட அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

தொடர்ந்து கலெக்டர் உமா மகேஸ்வரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுக்கோட்டை மாவட்டத் தில் பள்ளி மாணவ, மாணவி களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையிலும், சாலை விபத்துகளை தடுக்கும் பொருட்டும் விபத்தில்லா மாவட்டமாக உருவாக்கிட வும், மாவட்ட நிர்வாகம் மாவட்ட அளவில் குழுக்களை அமைத்து சாலை பாதுகாப் புக்கென பல்வேறு நட வடிக்கை களை மேற்கொண்டு வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டத் தில் உள்ள பள்ளி வாகனங் களில் புதுக்கோட்டை மற்றும் ஆலங்குடி வட்டாரத்தில் உள்ள 70 பள்ளிகளை சேர்ந்த 303 பள்ளி வாகனங்களும், அறந்தாங்கி வட்டாரத்தில் உள்ள 27 பள்ளிகளை சேர்ந்த 176 பள்ளி வாகனங்களும், இலுப்பூர் வட்டாரத்தில் உள்ள 23 பள்ளிகளை சேர்ந்த 82 பள்ளி வாகனங்களும் என மொத்தம் 120 பள்ளிகளை சேர்ந்த 561 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்படுகின்றன.

குறிப்பாக அனுமதியில்லாத வாகனங்களில் பள்ளி குழந்தை களை ஒப்பந்த அடிப்படையில் அழைத்து செல்லுதல், ஆட் டோக்களில் அளவுக்கு அதிக மான எண்ணிக்கையில் அபாயகரமான நிலையில் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்லுதல் உள் ளிட்ட செயல்களில் ஈடுபடு பவர்கள் மீது பள்ளி குழந்தை களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சட்டரீதியான கடும் நடவடிக்கையினை உடனுக் குடன் மேற்கொள்ள தொடர் புடைய அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கல்லூரி வாகனங்களை பள்ளி வாகனங்களாக இயக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. தனியார் வாகனங்கள் மூலம் பள்ளி குழந்தைகள் ஏற்றி செல்லப்படுவது தீவிரமாக கண்காணிக்கப்பட்டு குழந்தைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

1. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 9 பேர் கைது
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
2. அரசு பள்ளியில் கலெக்டர் திடீர் ஆய்வு மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவினை ருசி பார்த்தார்
பர்கூர் மலைப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் மாவட்ட கலெக்டர் கதிரவன் திடீர் ஆய்வு செய்தார். அப்போது அவர் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவினை ருசி பார்த்தார்.
3. பள்ளிகளின் செயல்பாட்டை முறையாக கண்காணிக்க வலியுறுத்தல்
மாவட்டத்தில் பள்ளி களின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு புகார்கள் கூறப்பட்டு வந்த போதிலும் நடவடிக்கை ஏதும் இல்லாததால் பள்ளிகளின் செயல்பாடுகளை முறையாக கண்காணிக்க முதன்மை கல்வி அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
4. நங்கவரம் சிவன் கோவிலில் சிலை திருட்டு தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் திடீர் ஆய்வு
நங்கவரம் சிவன்கோவிலில் சிலை திருட்டு தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேல் திடீர் ஆய்வு நடத்தினார்.
5. பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மைய செயல்பாடுகளை கலெக்டர் ஆய்வு
மாவட்ட சமூக நலத்துறையின் சார்பில் பெரம்பலூர் நகரில் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையம் செயல்பட்டு வருகிறது.

அதிகம் வாசிக்கப்பட்டவை