மாவட்ட செய்திகள்

பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி + "||" + The mission of schooling the school children's survey

பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி

பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி
பொன்னமராவதி வட்டார வள மையத்திற்குட்பட்ட அனைத்து குடியிருப்பு பகுதிகளிலும் வீடு, வீடாக பள்ளி செல்லா குழந்தைகள், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் கணக்கெடுப்புப்பணி நடைபெற்று வருகிறது.
பொன்னமராவதி,

பொன்னமராவதி வட்டார வள மையத்திற்குட்பட்ட அனைத்து குடியிருப்பு பகுதிகளிலும் வீடு, வீடாக பள்ளி செல்லா குழந்தைகள், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் கணக்கெடுப்புப்பணி நடைபெற்று வருகிறது. மேலத்தானியம், அண்ணாநகர், ஜே.ஜே.நகர், காமராஜ்நகர், கட்டையாண்டிப்பட்டி, பட்டமரத்தான்நகர் ஆகிய பகுதிகளில் பொன்னமராவதி ஒன்றிய ஆசிரியர் பயிற்றுனர்கள் அன்பழகன், பரிசுத்தம், பச்சமுத்து, மதனகுமார், சரவணன், அழகுராஜா உள்ளிட்ட ஆசிரியர்கள் கணக்கெடுப்பு பணியை மேற்கொண்டனர். இந்த கணக்கெடுப்புப் பணியை பள்ளி செல்லா குழந்தைகளுக்கான மாவட்ட ஒருங்கிணைப் பாளர் வீரப்பன் மற்றும் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணன் ஆகியோர் பார்வையிட்டனர். பொன்னமராவதி ஒன்றியத்திற்குட்பட்ட கட்டுமானப்பணிகள் நடைபெறும் இடங்கள், செங்கல் சூளை, அரிசி ஆலை, கல்குவாரி, மணல்குவாரி, தொழிற்சாலைகள், விவசாயம் நடைபெறும் இடம், பஸ் நிலையம், உணவகங்கள், பழம், பூ, காய்கறி அங்காடிகள் ஆகிய பகுதிகளில் இச்சிறப்பு கணக் கெடுப்புப்பணி நடைபெற்று வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

1. 9 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் வண்டல்-அவரிக்காடு இடையே பாலம் கட்டும் பணி
9 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் வண்டல்-அவரிக்காடு இடையே பாலம் கட்டும் பணி விரைந்து முடிக்கப்படுமா? என கிராம மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
2. கும்பகோணம் பகுதியில் உள்ள கோவில்களில், 4-வது நாளாக போலீசார் கண்காணிப்பு பணி
கும்பகோணம் பகுதியில் உள்ள கோவில்களில் 4-வது நாளாக போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
3. ஆண்டு திருவிழாவை முன்னிட்டு வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு
ஆண்டு திருவிழாவை முன்னிட்டு வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
4. தஞ்சை-மன்னார்குடி இடையே இருவழிச்சாலை அமைக்க நிலம் அளவிடும் பணி மும்முரம்
தஞ்சை-மன்னார்குடி இடையே இருவழிச்சாலை அமைக்க நிலம் அளவிடும் பணியில் வருவாய்த்துறையினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
5. ஊரக வளர்ச்சித்துறை சார்பில் சிறுபாசன ஏரிகள், குட்டைகள் புனரமைக்கும் பணி
ஊரக வளர்ச்சித்துறை சார்பில் கீழப்பழூரில் உள்ள சிறுபாசன ஏரிகள், குட்டைகளில் புனரமைக்கும் பணியை அரசு தலைமைக்கொறடா தாமரை ராஜேந்திரன் தொடங்கி வைத்தார்.