அரசு சட்டக்கல்லூரியில் விண்ணப்பம் வினியோகம் முதல் நாளில் 153 பேர் வாங்கி சென்றனர்


அரசு சட்டக்கல்லூரியில் விண்ணப்பம் வினியோகம் முதல் நாளில் 153 பேர் வாங்கி சென்றனர்
x
தினத்தந்தி 16 May 2019 11:00 PM GMT (Updated: 16 May 2019 8:21 PM GMT)

திருச்சியில் உள்ள அரசு சட்டக்கல்லூரியில் விண்ணப்பம் வினியோகம் தொடங்கியது. முதல் நாளில் 153 பேர் விண்ணப்பங்களை வாங்கி சென்றனர்.

திருச்சி,

பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி அடைந்து சட்ட கல்வி படிக்க விருப்பமுள்ள மாணவ-மாணவிகள் சட்டக்கல்லூரியில் சேர விண்ணப்பங்கள் வினியோகம் நேற்று தொடங்கியது. திருச்சி அரசு சட்டக்கல்லூரியில் 5 ஆண்டு சட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வினியோகிக்கும் பணியை கல்லூரி முதல்வர் ராஜேஸ்வரன் நேற்று காலை தொடங்கி வைத்தார். அப்போது உதவி பேராசிரியை டாக்டர் லதா உடன் இருந்தார்.

விண்ணப்பம் பெற விரும்பும் மாணவ-மாணவிகள் விண்ணப்ப கட்டணத் தொகையை வங்கியில் செலுத்தி அதற்குரிய ரசீதை கல்லூரியில் ஒப்படைத்து விண்ணப்பத்தை பெற்று கொள்ளலாம்.

31-ந் தேதிக்குள்...

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வருகிற 31-ந் தேதிக்குள் சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். முதல் நாளான நேற்று திருச்சி அரசு சட்டக்கல்லூரியில் 153 பேர் விண்ணப்பங்களை வாங்கி சென்றனர். இதேபோல் 3 ஆண்டு சட்டப்படிப்புக்கான விண்ணப்பங்கள் ஜூன் மாதம் 28-ந் தேதி முதல் வழங்கப்படுகிறது. அந்த விண்ணப்பங்களை ஜூலை மாதம் 26-ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story