மாவட்ட செய்திகள்

திருச்சியில் ஓட்டல்கள், டீக்கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை + "||" + In Tiruchirapalli, in televisions Food Safety Officers Action Test

திருச்சியில் ஓட்டல்கள், டீக்கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை

திருச்சியில் ஓட்டல்கள், டீக்கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை
திருச்சியில் ஓட்டல்கள், டீக்கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் புகையிலை மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருச்சி,

தமிழகம் முழுவதும் கடந்த ஜனவரி மாதம் முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனாலும் தடையை மீறி ஒரு சில கடைகளில் பிளாஸ்டிக் பைகள், கப்புகள் போன்றவற்றை விற்பனைக்காக வைத்துள்ளனர். இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் அவ்வப்போது அதிரடி சோதனை நடத்தி பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து வருகிறார்கள்.


கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி பெரியகடைவீதி, அல்லிமால்தெருவில் மாநகராட்சி அதிகாரிகள் கடைகளில் சோதனை நடத்தி பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்ததுடன், சம்பந்தப்பட்ட கடைகளுக்கு அபராதமும் விதித்தனர்.

பறிமுதல்

இந்தநிலையில் நேற்று காலை திருச்சி பாரதிதாசன் சாலையில் உள்ள டீக்கடை, கோர்ட்டு அருகே உள்ள ஓட்டல்கள் மற்றும் டீக்கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சித்ரா தலைமையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் 10 கிலோ புகையிலை பொருட்கள், 5 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள், மேலும் சில ஓட்டல்களில் பதுக்கி வைத்து இருந்த 15 கிலோ கெட்டுப்போன இறைச்சி வகைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதேபோல் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

தொடர்புடைய செய்திகள்

1. குன்னத்தில் 15 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்
கடைகளில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டது.
2. மார்த்தாண்டம் கடைகளில் 20 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
மார்த்தாண்டம் கடைகளில் இருந்து 20 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அவற்றை பாதுகாப்பான முறையில் அழித்தனர்.
3. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்
பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என்று அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
4. பிளாஸ்டிக்குக்கு உலகம் விடை கொடுக்கும் நேரம் வந்துவிட்டது - ஐ.நா. மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு
ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருளுக்கு உலகம் விடை கொடுக்கும் நேரம் வந்து விட்டது என்று ஐ.நா. மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார்.
5. பிளாஸ்டிக் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்; பிரதமர் மோடி
பிளாஸ்டிக் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என பிரதமர் மோடி மன் கி பாத் நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.