மாவட்ட செய்திகள்

மானாமதுரை அருகே, மின்னல் தாக்கி பள்ளி மாணவன் பலி + "||" + Near Manamadurai, Lightning is attacked School student kills

மானாமதுரை அருகே, மின்னல் தாக்கி பள்ளி மாணவன் பலி

மானாமதுரை அருகே, மின்னல் தாக்கி பள்ளி மாணவன் பலி
மானாமதுரை அருகே மின்னல் தாக்கி 6-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக பலியானான்.
மானாமதுரை,

மானாமதுரை அருகே உள்ள ஆலம்பச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ராவண கண்ணன். இவரது மகன் பிரவீன் (வயது 11). இவன் சென்னையில் உள்ள ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து தேர்வு எழுதியுள்ளான். தற்போது கோடை விடுமுறையையொட்டி தனது தந்தையின் சொந்த கிராமத்திற்கு பெற்றோருடன் வந்திருந்தான். இந்த நிலையில் நேற்று மாலை மாணவன் பிரவீன் தனது வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது அந்த பகுதியில் பலத்த இடி- மின்னலுடன் லேசான மழை பெய்தது.

இதில் எதிர்பாராதவிதமாக மாணவன் பிரவீன் மீது மின்னல் தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அவன் உடல் கருகி பரிதாபமாக இறந்தான். மேலும் மின்னல் தாக்கியதில் அருகில் இருந்த பனை மரத்திலும் விரிசல் ஏற்பட்டது. மாணவனின் உடலைப் பார்த்து அவனது பெற்றோர்கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

இதையடுத்து அங்கு வருவாய்த்துறை அதிகாரிகள், கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோர் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. காஞ்சீபுரம் அருகே கார் மோதி பள்ளி மாணவன் பலி முதியவர் படுகாயம்
காஞ்சீபுரம் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த மாணவன் மீது கார் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தான். மேலும் உடன் நின்று கொண்டு இருந்த முதியவர் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
2. திற்பரப்பு அருகே பரிதாபம் மின்னல் தாக்கி மாணவன் சாவு
திற்பரப்பு அருகே மின்னல் தாக்கி மாணவன் பரிதாபமாக இறந்தான்.
3. குன்னூர் அருகே, மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் சாவு
குன்னூர் அருகே மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
4. கன்டெய்னர் லாரி மோதி பள்ளி மாணவன் பலி
திருவொற்றியூரில் கன்டெய்னர் லாரி மோதி பள்ளி மாணவன் பலியானான்.
5. கடையநல்லூர் அருகே பரிதாபம் லாரி- மொபட் மோதல், பள்ளிக்கூட மாணவர் பலி
கடையநல்லூர் அருகே லாரி- மொபட் மோதிக்கொண்ட விபத்தில் பள்ளிக்கூட மாணவர் பரிதாபமாக பலியானார். லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.