மாவட்ட செய்திகள்

சரக்கு ஆட்டோவில் மணல் கடத்தியவர் கைது + "||" + A man arrested by sands smuggling in cargo auto

சரக்கு ஆட்டோவில் மணல் கடத்தியவர் கைது

சரக்கு ஆட்டோவில் மணல் கடத்தியவர் கைது
வேலூரில் சரக்கு ஆட்டோவில் மணல் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.

வேலூர், 

வேலூர் வடக்கு போலீஸ் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் போலீசார் நேற்று காலை 11 மணிக்கு கிரீன் சர்க்கிள் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டதில், மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது.

விசாரணையில் சரக்கு ஆட்டோவில் வந்தவர் வேலூர் தோட்டப்பாளையம் தென்னைமரத்தெருவை சேர்ந்த பெருமாள் மகன் கலைவாணன் (வயது 25) என்பதும், பாலாற்றில் இருந்து மணல் கடத்தி வந்ததும் தெரிந்தது. இதையடுத்து கலைவாணனை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து மணலுடன் சரக்கு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்காவில் பரபரப்பு சம்பவம் : நடுவானில், விமானத்தில் சிறுமியுடன் உல்லாசம் - தொழிலதிபர் கைது
அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஸ்டீபன் பிராட்லே மெல் (வயது 53). தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் இவர் சொந்தமாக சில விமானங்களை வைத்துள்ளார்.
2. கன்டெய்னர் லாரியை கடத்தி ரூ.1½ கோடி செம்பு கம்பி கொள்ளை : 6 பேர் கும்பல் கைது
நவிமும்பையில் கன்டெய்னர் லாரியை கடத்தி ரூ.1½ கோடி மதிப்பிலான செம்பு கம்பிகளை கொள்ளையடித்த 6 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.
3. வஜ்ரேஷ்வரி கோவிலில் கொள்ளையடித்த 5 பேர் கைது : ரூ.2.83 லட்சம் பறிமுதல்
பிரசித்தி பெற்ற வஜ்ரேஷ்வரி கோவிலில் உண்டியலை உடைத்து ரூ.7.10 லட்சத்தை கொள்ளையடித்த 5 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 83 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
4. லஞ்சம் வாங்கிய மின்வாரிய வணிக ஆய்வாளர் கைது
வாலாஜாவில் லஞ்சம் வாங்கிய மின்வாரிய வணிக ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.
5. பாலித்தீன் பை தயாரிக்கும் நிறுவன பங்குதாரரிடம் போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.2¾ கோடி மோசடி செய்த 2 பேர் கைது
திருப்பூரில் பனியன் நிறுவனங்களுக்கு பயன்படுத்தும் பாலித்தீன் பை தயாரிக்கும் நிறுவன பங்குதாரரிடம், போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.2¾ கோடி மோசடி செய்த 2 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.