மாவட்ட செய்திகள்

அரக்கோணம் தாலுகா அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் + "||" + Consultative meeting at Arakonam Taluk office

அரக்கோணம் தாலுகா அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம்

அரக்கோணம் தாலுகா அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம்
அரக்கோணம் தாலுகா அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அரக்கோணம், 

ராணிப்பேட்டையில் வாக்குப்பதிவு எண்ணும் மையத்தில் வருவாய்த்துறையினர் விதிமுறைகளை எவ்வாறு கடைபிடிக்க வேண்டும் என்பது குறித்து அரக்கோணம் தாலுகா அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் மற்றும் செயல்விளக்க பயிற்சி நடந்தது. மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலரும், அரக்கோணம் தொகுதி தேர்தல் அலுவலருமான வேணுசேகரன் தலைமை தாங்கினார். தாசில்தார் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். உதவி தேர்தல் அலுவலர் ஜெயப்பிரகாஷ் வரவேற்றார்.

கூட்டத்தில் வாக்குப்பதிவு எண்ணும் போது வருவாய்த்துறை அலுவலர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், அரசின் விதிமுறைகளை எவ்வாறு கடைபிக்க வேண்டும் என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் துணை தாசில்தார் அருள்செல்வம், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தொடர்புடைய செய்திகள்

1. அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை: தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்ததால் கூட்டம் ரத்து
பரமத்தி வேலூரில் நடைபெற இருந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திற்கு தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்ததால் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
2. மலை கிராமங்களில் தடையில்லாமல் வாக்கு அளிக்க தேவையான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மலை கிராமங்களில் தடையில்லாமல் வாக்கு அளிக்க தேவையான முன்னேற்பாடுகள் செய்வது குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் பிரபாகர் தலைமையில் நடந்தது.
3. நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக-ஆந்திர மாநில போலீசார் ஆலோசனை கூட்டம் பர்கூரில் நடந்தது
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக-ஆந்திர மாநில போலீசார் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் பர்கூரில் நடந்தது.
4. தூத்துக்குடியில் அனைத்து கட்சி பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன் தலைமையில் நடந்தது
தூத்துக்குடியில் அனைத்து கட்சி பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன் தலைமையில் நேற்று நடந்தது.
5. செலவின கணக்குகள் குறித்து விலைப்பட்டியல் தயார் செய்ய அனைத்துக்கட்சி பிரமுகர்களுக்கான ஆலோசனை கூட்டம்
செலவின கணக்குகள் குறித்து விலைப்பட்டியல் தயார் செய்ய அனைத்துக்கட்சி பிரமுகர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.