மாவட்ட செய்திகள்

லஞ்சம் வாங்கிய மின்வாரிய வணிக ஆய்வாளர் கைது + "||" + Electric commerce inspector arrested at Bribed

லஞ்சம் வாங்கிய மின்வாரிய வணிக ஆய்வாளர் கைது

லஞ்சம் வாங்கிய மின்வாரிய வணிக ஆய்வாளர் கைது
வாலாஜாவில் லஞ்சம் வாங்கிய மின்வாரிய வணிக ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.

வாலாஜா, 

வாலாஜாவில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக அலுவலகத்தில், அனந்தலை கிராமத்தை சேர்ந்த பாலாஜி என்பவர் தன் வீட்டிற்கு மின் இணைப்பு மாற்றி தரக்கோரி விண்ணப்பித்திருந்தார். இந்த நிலையில் மின்வாரிய அலுவலகத்தில் வேலை பார்க்கும் வணிக ஆய்வாளர் சரவணன் என்பவர் பாலாஜியிடம் ரூ.9 ஆயிரத்து 600 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பாலாஜி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் கொடுத்தார். அதன்பேரில் நேற்று பாலாஜி வணிக ஆய்வாளர் சரவணனிடம் லஞ்ச பணம் தரும் போது, அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு சரவணகுமார், இன்ஸ்பெக்டர்கள் விஜயலட்சுமி, விஜய் மற்றும் போலீசார் மின் வணிக ஆய்வாளர் சரவணனை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. போராட்டத்தில் அரசு பஸ்களை சேதப்படுத்திய 11 பேர் கைது
டி.கே.சிவக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து ராமநகரில் நடந்த போராட்டத்தில் அரசு பஸ்களை சேதப்படுத்தியதாக 11 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
2. காங்கேயம் அருகே, மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
காங்கேயம் அருகே மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
3. குன்னம் அருகே இரட்டைக்கொலை வழக்கில் 3 பேர் கைது தலைமறைவானவருக்கு வலைவீச்சு
குன்னம் அருகே நடந்த இரட்டைக்கொலை வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவானவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
4. ஆசைவார்த்தை கூறி பிளஸ்-1 மாணவியை கர்ப்பமாக்கிய கட்டிட தொழிலாளி கைது
பெத்தநாயக்கன்பாளையத்தில் ஆசைவார்த்தை கூறி, பிளஸ்-1 மாணவியை கர்ப்பமாக்கிய கட்டிட தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
5. திருப்பூரில், கலெக்டர் அலுவலக பெண் ஊழியர் வீட்டில் ரூ.14 லட்சம் திருடிய 2 பேர் கைது
திருப்பூரில் கலெக்டர் அலுவலக பெண் ஊழியர் வீட்டில் ரூ.14 லட்சம் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-