மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி, புதுக்கோட்டை, ஏரல் பகுதியில்மது விற்ற 22 பேர் கைது802 பாட்டில்கள் பறிமுதல் + "||" + Thoothukudi, Pudukottai, Erell area 22 people arrested for selling liquor 802 bottles confiscated

தூத்துக்குடி, புதுக்கோட்டை, ஏரல் பகுதியில்மது விற்ற 22 பேர் கைது802 பாட்டில்கள் பறிமுதல்

தூத்துக்குடி, புதுக்கோட்டை, ஏரல் பகுதியில்மது விற்ற 22 பேர் கைது802 பாட்டில்கள் பறிமுதல்
தூத்துக்குடி, புதுக்கோட்டை, ஏரல் பகுதியில் சட்ட விரோதமாக மது விற்ற 22 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து 802 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தூத்துக்குடி, 

தூத்துக்குடி வடபாகம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவராமன், அய்யம்பிள்ளை மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் லட்சுமி ஆகியோர் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கருப்பட்டி ஆபீஸ் சந்திப்பு பகுதி, புதிய பஸ்நிலையம் அருகே உள்ள மேம்பாலம் பகுதி, அமெரிக்கன் ஆஸ்பத்திரி சந்திப்பு பகுதி ஆகிய பகுதிகளில் சட்ட விரோதமாக மது விற்ற, லூர்தம்மாள்புரத்தை சேர்ந்த மரிய ஜோசப் (வயது 43), தேவர்காலனியை சேர்ந்த ஆனந்த் (27), கோவில்பிள்ளைவிளையை சேர்ந்த தர்மபுத்திரன் (40) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 93 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அதே போல் முத்தையாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜபிரபு ரோந்து பணியில் இருந்த போது ஸ்பிக்நகர் சந்திப்பு, தோப்பு தெரு சந்திப்பு பகுதிகளில் சட்ட விரோதமாக மது விற்று கொண்டு இருந்த எம்.சவேரியர்புரம் வேதகோவில்தெருவை சேர்ந்த அபினேஷ் (20), முத்தையாபுரம் வரதவிநாயகர்கோவில் தெருவை சேர்ந்த மாரியப்பன் (39), அத்திமரப்பட்டியை சேர்ந்த மணிகண்டன் (31) ஆகியோரை கைது செய்தார். அவர்களிடம் இருந்து 65 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

புதுக்கோட்டை அருகே உள்ள கூட்டாம்புளி ரோடு மற்றும் கூட்டாம்புளி டாஸ்மாக் அருகே சட்ட விரோதமாக மது விற்ற குலையன்கரிசலை சேர்ந்த சேர்மபழம் (50), கூட்டாம்புளியை சேர்ந்த பவுன்ராஜ் (55) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 101 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஏரல் காவல்நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக மது விற்றதாக பெருமாள் (32), ராஜா (45), மகாராஜன் (35), ஹரிதாஸ் (36), சுடலைமணி (46), சுபாஷ் சந்திரபோஸ் (70), சுரேஷ்குமார் (50) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 237 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதே போல் சாயர்புரம் காவல்நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக மது விற்றதாக அந்தோணி முத்து (67), ராஜேஷ் (27), ஜெயராஜ் (59), தங்கபாண்டி (47), செல்வராஜ் (45), செல்வா (26), அமல்ராஜ் (30) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 306 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மொத்தமாக மது விற்றதாக 22 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து 802 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.