மாவட்ட செய்திகள்

நெல்லை அருகேவீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகை திருட்டு + "||" + Near Tirunelveli 6 pound jewelry theft to break the lock of the house

நெல்லை அருகேவீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகை திருட்டு

நெல்லை அருகேவீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகை திருட்டு
நெல்லை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகைகளை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பேட்டை, 

நெல்லையை அடுத்த சுத்தமல்லி கொண்டாநகரம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா. இவருடைய மகன் ஆனந்த் (வயது 36). கூலி தொழிலாளி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய குடும்பத்தினருடன் வெளியூரில் உள்ள உறவினரின் வீட்டுக்கு சென்றார்.

இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் ஆனந்தின் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து திறந்து உள்ளே நுழைந்தனர். பின்னர் அவர்கள், வீட்டில் உள்ள பீரோவை உடைத்து திறந்து, அதில் இருந்த 6 பவுன் நகைகளை திருடிச் சென்றனர்.

இந்த நிலையில் ஆனந்தின் அக்காளான விஜயா தனது தம்பியின் வீட்டுக்கு வந்தார். அப்போது அவர், தனது தம்பியின் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் தனது தம்பி ஆனந்துக்கு தகவல் தெரிவித்தார்.

உடனே ஆனந்த் தனது வீட்டுக்கு வந்தார். அப்போது அவரது வீட்டில் இருந்த 6 பவுன் நகை திருடு போனது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், சுத்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து, வீட்டின் கதவின் பூட்டை உடைத்து, நகைகளை திருடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.