காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஜமாபந்தி 29-ந்தேதிதொடக்கம் கலெக்டர் தகவல்


காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஜமாபந்தி 29-ந்தேதிதொடக்கம் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 17 May 2019 10:15 PM GMT (Updated: 17 May 2019 7:50 PM GMT)

காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் வருகிற 29-ந்தேதி ஜமாபந்தி நடைபெறவுள்ளது என்று கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

காஞ்சீபுரம் மாவட்டத்தில் வருவாய்த் துறை சார்பாக ஜமாபந்தி எனப்படும் வருவாய் தீர்வாயம் வருகிற 29-ந்தேதி முதல் ஜூன் மாதம் 18-ந்தேதி முடிய அனைத்து வட்டங்களிலும் நடைபெறும். செங்கல்பட்டு வட்டத்தில் மாவட்ட கலெக்டர், காஞ்சீ புரம் வட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி, ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் காஞ்சீபுரம் சார் ஆட்சியர், திருப்போரூர் வட்டத்தில் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்), திருக்கழுக்குன்றம் வட்டத்தில் செங்கல்பட்டு வருவாய் ஆர்.டி.ஓ., செய்யூர் வட்டத்தில் மதுராந்தகம் ஆர்.டி.ஓ., தாம்பரம் வட்டத்தில் தாம்பரம் வருவாய் ஆர்.டி.ஓ., மதுராந்தகம் வட்டத்தில் மாவட்ட ஆய்வுக் குழு அதிகாரி, பல்லாவரம் வட்டத்தில் தனித்துணை கலெக்டர் (தகவல் தொழில்நுட்ப துரித சாலை திட்டம்), வாலாஜாபாத் வட்டத்தில் தனித்துணை கலெக்டர், உத்திரமேரூர் வட்டத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரி ஆகியோர் தலைமையில் ஜமாபந்தி நடைபெறும்.

மேலும் அந்தந்த வட்டங்களில் மேற்கண்ட அதிகாரிகள் தலைமையில் நடைபெறும் நாட்களின் விவரங்கள் தாசில்தார் அலுவலகத்தில் தெரிந்து கொள்ளலாம்.

அனைத்து வட்டங்களிலும், நடைபெறும் வருவாய் தீர்வாயத்தில் குறுவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் முன்னதாகவே சம்மந்தப்பட்ட தாசில்தாரிடம் தங்களது குறைகளை மனுக்கள் மூலம் தெரிவிக்கவும் அவ்வாறு முன்னதாக தெரிவிக்கப்படும் மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

எனவே நடைபெறவுள்ள வருவாய் தீர்வாய நிகழ்வினை பொதுமக்கள் நல்லமுறையில் பயன்படுத்திக்கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story