நாடாளுமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு கூட்டணியின் சாயம் வெளுத்துவிடும் எடியூரப்பா சொல்கிறார்


நாடாளுமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு கூட்டணியின் சாயம் வெளுத்துவிடும் எடியூரப்பா சொல்கிறார்
x
தினத்தந்தி 17 May 2019 10:30 PM GMT (Updated: 17 May 2019 8:42 PM GMT)

நாடாளுமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு கூட்டணியின் சாயம் வெளுத்துவிடும் என்று எடியூரப்பா கூறினார்.

பெங்களூரு,

கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா உப்பள்ளியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

நாடாளுமன்ற தேர்தல் முடிவு வெளியானதும், கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி கவிழந்துவிடும். தேர்தல் முடிவுக்கு பிறகு ஒரு நாள் கூட இந்த அரசு நீடிக்காது. வெளியில் பார்ப்பதற்கு, காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கூட்டணி ஒற்றுமையாக இருப்பது போல் தெரிகிறது.

ஆனால் உள்ளே அவர்கள் மோதிக்கொள்கிறார்கள். முதல்-மந்திரி பதவியில் குமாரசாமி நீடிக்கக்கூடாது என்று சித்தராமையா சதித்திட்டம் தீட்டியுள்ளார். இதற்காகவே முதல்-மந்திரி பதவிக்கு எச்.டி.ரேவண்ணாவுக்கும் தகுதி உள்ளது என்று சித்தராமையா கூறி குழப்பத்தை உருவாக்கியுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் முடிவு வெளியான பிறகு கூட்டணியின் சாயம் வெளுத்துவிடும். அதுவரை அனைவரும் பொறுமையாக இருக்க வேண்டும். மாநிலத்தில் வளர்ச்சி பணிகள் முழுவதுமாக முடங்கிவிட்டது.

மக்களுக்கு குடிநீர் கிடைக்கவில்லை. கால்நடைகளுக்கு தீவனம் இல்லை. வறட்சி பகுதிகளில் மந்திரிகள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவில்லை. பெங்களூருவில் உட்கார்ந்து கொண்டு முதல்-மந்திரி காணொலி காட்சி மூலம் ஆய்வு கூட்டம் நடத்தினால் பிரச்சினைகள் தீராது. இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

Next Story