அனந்தகுமார் ஹெக்டே, நளின்குமார் கட்டீல் கோட்சேவை ஆதரித்து கூறிய கருத்து, மன்னிக்க முடியாத குற்றம் எடியூரப்பா கடும் அதிருப்தி
அனந்தகுமார் ஹெக்டே, நளின்குமார் கட்டீல் ஆகியோர் கோட்சேவை ஆதரித்து கூறிய கருத்து மன்னிக்க முடியாத குற்றம் என்று எடியூரப்பா கடும் அதிருப்தியை வெளிப் படுத்தினார்.
பெங்களூரு,
காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சேவை ஆதரித்து மத்திய மந்திரி அனந்தகுமார் ஹெக்டே, நளின் குமார் கட்டீல் எம்.பி. ஆகியோர் டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டு இருந்தனர். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.அவர்கள் 2 பேரையும் கண்டித்து இன்று(சனிக்கிழமை) மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்து உள்ளது.
கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா உப்பள்ளியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
காந்தியை கொன்ற நாதுராம் கோட்சேவை ஆதரித்து மத்திய மந்திரி அனந்தகுமார் ஹெக்டே, நளின்குமார் கட்டீல் ஆகியோர் கருத்து தெரிவித்து இருப்பது கட்சியின் புகழுக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவர்களுக்கு விளக்கம் கேட்டு எங்கள் கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா நோட்டீசு அனுப்பியுள்ளார். 10 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. நாட்டுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தவர் மகாத்மா காந்தி.
ஒருவரை பற்றி பேசும்போது என்ன பேசுகிறோம் என்ற அறிவு இருக்க வேண்டும். இத்தகைய ெபாறுப்பற்ற கருத்துகளை கூறக்கூடாது. காந்தியை பற்றி கீழ்த்தரமாக பேசுவது நல்லதல்ல. அனந்தகுமார் ஹெக்டே, நளின்குமார் கட்டீல் கூறிய கருத்து, மன்னிக்க முடியாத குற்றம். இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

Related Tags :
Next Story