கற்பழிப்பு வழக்கில் கைதான டி.வி. நடிகர் கரன் ஒபேராயின் ஜாமீன் மனு தள்ளுபடி கோர்ட்டு உத்தரவு


கற்பழிப்பு வழக்கில் கைதான டி.வி. நடிகர் கரன் ஒபேராயின் ஜாமீன் மனு தள்ளுபடி கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 18 May 2019 3:06 AM IST (Updated: 18 May 2019 3:06 AM IST)
t-max-icont-min-icon

கற்பழிப்பு வழக்கில் கைதான டி.வி. நடிகர் கரன் ஒபேராயின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து செசன்ஸ் கோர்ட்டு உத்தரவிட்டது.

மும்பை,

மும்பையை சேர்ந்த டி.வி. நடிகர் கரன் ஒபேராய். இவர் ‘ஜாசி ஜெய்சி கொய் நகின்', ‘இன்சைட் எட்ஜ்' உள்ளிட்ட டி.வி. தொடர்களில் நடித்து பிரபலமானவர். இவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பெண் ஒருவரை கற்பழித்து உள்ளார்.

மேலும் அந்த பெண்ணை செல்போனில் ஆபாசமாகவும் படம் பிடித்து பணம் கேட்டு மிரட்டி வந்து உள்ளார். இதுபற்றி அந்த பெண் ஒஷிவாரா போலீசில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் டி.வி. நடிகர் கரன் ஒபேராய் மீது வழக்குப்பதிவு செய்து கடந்த சில தினங்களுக்கு முன் அவரை கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்தநிலையில், கரன் ஒபேராய் ஜாமீன் கோரி தின்தோஷி செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அவரது ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story