மாவட்ட செய்திகள்

சிவகங்கை அருகே மின்னல் தாக்கி 23 ஆடுகள் பலி + "||" + Lightning strikes near Sivagangai killed 23 sheep

சிவகங்கை அருகே மின்னல் தாக்கி 23 ஆடுகள் பலி

சிவகங்கை அருகே மின்னல் தாக்கி 23 ஆடுகள் பலி
சிவகங்கை அருகே மின்னல் தாக்கி 23 ஆடுகள் பலியாகின.

சிவகங்கை,

சிவகங்கை மற்றும் அதன் சுற்றப்புற பகுதியில் நேற்று காலை கடும் வெப்பம் நிலவியது. மாலையில் வெயில் குறைந்த வானில் மேகக்கூட்டம் கூடியது. அதைத்தொடர்ந்து இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

இளையான்குடியை அடுத்த மகாசிவனேந்தலை சேர்ந்த ஆண்டார் (வயது 65). இவர் சொந்தமாக ஆட்டுகிடாய் வைத்துள்ளார். நேற்று இவர் சிவகங்கையை அடுத்த கூத்தாண்டன் அருகே உள்ள ஒரு வயலில் ஆட்டு கிடாய் போட்டிருந்தார். அப்போது மாலையில் திடீரென இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

அதைத்தொடர்ந்து ஆண்டார் அந்த பகுதியில் உள்ள ஒரு மரத்தடியில் தனது ஆடுகளை ஓட்டிக் கொண்டு ஒதுங்கி நின்றார். அப்போது எதிர்பாராவிதமாக மின்னல் தோன்றி ஆடுகளை தாக்கியது. அதில் சம்பவ இடத்திலேயே 23 ஆடுகள் இறந்து போயின.

மேலும் மின்னல் தாக்கியதில் மயக்கம் அடைந்த ஆண்டார் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு பின்பு உயிர் பிழைத்து கொண்டார். இதுகுறித்து சிவகங்கை நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. மண்ணடியில் வீட்டின் கூரை இடிந்து விழுந்து பெண் பலி
மண்ணடியில் வீட்டின் கூரை இடிந்து விழுந்து பெண் பரிதாபமாக இறந்தார்.
2. உத்திரமேரூர் அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதல்; தனியார் நிறுவன ஊழியர் பலி
உத்திரமேரூர் அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.
3. பேரம்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 பேர் பலி; நேர்முக தேர்வுக்கு வந்த போது பரிதாபம்
பேரம்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வேலைக்கான நேர்முக தேர்வுக்கு வந்தபோது 2 பேர் பலியானார்கள்.
4. திருச்சியில் பரிதாபம்: ‘ஹெல்மெட்’ அணிந்து சென்றும் லாரி சக்கரத்தில் சிக்கி அதிகாரி பலி
திருச்சி தென்னூரில் ‘ஹெல்மெட்’ அணிந்து சென்றும் லாரி சக்கரத்தில் சிக்கி அதிகாரி ஒருவர் பலியானார்.
5. தா.பேட்டை அருகே பரிதாபம்: மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி நண்பருடன் ராணுவ வீரர் பலி
தா.பேட்டை அருகே மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் நண்பருடன் ராணுவ வீரர் பரிதாபமாக உயிரிழந்தார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை