கவர்னர் மாளிகைக்கு எந்த கோப்புகளும் வரவில்லை- கவர்னர் கிரண்பெடி தகவல்


கவர்னர் மாளிகைக்கு எந்த கோப்புகளும் வரவில்லை- கவர்னர் கிரண்பெடி தகவல்
x
தினத்தந்தி 18 May 2019 4:41 AM IST (Updated: 18 May 2019 4:41 AM IST)
t-max-icont-min-icon

கடந்த சில நாட்களாக கவர்னர் மாளிகைக்கு எந்த கோப்புகளும் வரவில்லை என்று கவர்னர் கிரண்பெடி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி,

புதுவை அரசின் அன்றாட நடவடிக்கைகளில் கவர்னர் தலையிடுவது தொடர்வதை எதிர்த்து முதல்–அமைச்சரின் பாராளுமன்ற செயலாளார் லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ. ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் கவர்னருக்கு என்ற சிறப்பு அதிகாரம் எதுவும் கிடையாது எனவும், அமைச்சரவையின் முடிவின்படியே கவர்னர் செயல்பட வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த உத்தரவின்படி செயல்படுமாறு லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ. அனைத்து அரசு செயலாளர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். உத்தரவின்படி செயல்படாவிட்டால் கோர்ட்டு அவமதிப்புக்குள்ளாக நேரிடும் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ. அரசு செயலாளர்களுக்கு எழுதிய கடிதம் குறித்து கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:–

நிர்வாகம் என்பது மக்களுக்காக மட்டுமே. கடந்த சில நாட்களாக கவர்னர் மாளிகைக்கு எந்த ஒரு கோப்புகளும் வரவில்லை. இதை புதுச்சேரியின் நிர்வாகி என்ற முறையில் மக்களுக்கு தெரிவிக்க வேண்டியது எனது கடமை.

மேலும் புதுவை யூனியன் பிரதேச சட்ட விதிகள், அலுவல் விதிகளில் எந்தவித மாற்றமும் கொண்டுவரப்படவில்லை. அதில் மாற்றம் இல்லாமல் அப்படியேதான் உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.


Next Story