திருவாரூரில், சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு - அதிகாரிகள் கவனிப்பார்களா?
திருவாரூரில் சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து கழிவுநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருவாரூர்,
திருவாரூர்-பழையநாகை சாலை ஆசாத்ரோடு 22-வது வார்டு பகுதியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளன. குடியிருப்புகள் நிறைந்த இந்த பகுதியில் உள்ள சாக்கடையில் தற்போது அடைப்பு ஏற்பட்டதால், கழிவுநீர் வெளியேறி வீடுகளை சூழ்ந்து சாலையில் ஓடுகிறது.
இந்த கழிவு நீர் சாலைகளில் தேங்கியுள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இந்த சாலை வழியாக செல்வோர் மூக்கை பிடித்தபடி சென்று வருகின்றனர்.
சாலையில் தேங்கி உள்ள கழிவு நீரில் கொசு உற்பத்தியாகி அந்த பகுதியில் உள்ள குடியிருப்புகளில் வசித்து வரும் மக்களுக்கு டெங்கு, மலேரியா உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறையினர் இதை கவனித்து சாலையில் தேங்கி உள்ள கழிவு நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
Related Tags :
Next Story