குழந்தை மசாஜ்


குழந்தை மசாஜ்
x
தினத்தந்தி 19 May 2019 8:45 AM IST (Updated: 18 May 2019 8:08 PM IST)
t-max-icont-min-icon

கோடை காலத்தில் பச்சிளங்குழந்தைகளின் உடலில் குளிர்ச்சியை தக்கவைத்துக் கொள்வதற்கு தலை பகுதியை முறையாக பராமரிக்க வேண்டியது அவசியம்.

ஏனெனில் குழந்தைகளின் மென்மையான சருமம் பருவகால மாற்றங்களுக்கு ஏற்ப தயார்படுத்தப்பட வேண்டும்.

கோடை காலத்தில் வியர்வை பிரச்சினையால் அவதிக்குள்ளாவார்கள். சருமத்தில் வறட்சியும் ஏற்படும். அதனை தவிர்க்க தலைப் பகுதியில் எண்ணெய் மசாஜ் செய்ய வேண்டும். அது ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும். ஆழ்ந்த தூக்கத்திற்கும் துணை புரியும். அதற்கு ஆலிவ் ஆயில் பயன்படுத்துவது நல்லது. அதில் இருக்கும் வைட்டமின் இ சத்து சருமத்தின் மென்மையை தக்க வைக்க உதவும்.

ஷாம்புவை பயன்படுத்தியும் லேசாக மசாஜ் செய்யலாம். அதற்கு இயற்கையான புரதத்தை உள்ளடக்கிய ஷாம்புவை பயன்படுத்துவது நல்லது. அது ஈரப்பதத்தை தக்க வைக்க உதவும். முடி வளரவும் வழிவகை செய்யும். அந்த ஷாம்புவை எண்ணெய் தடவுவது போல் நன்றாக தேய்த்து மசாஜ் செய்து விட வேண்டும். அந்த ஷாம்பு கண்களுக்கு எரிச்சல் ஏற்படுத்தாதவாறும் இருக்க வேண்டும். தர்ப்பூசணி மற்றும் வேப்பமர இலையை விழுதாக அரைத்து சருமத்தில் தேய்த்தும் மசாஜ் செய்து விடலாம். சிறிது நேரம் கழித்து நீரில் கழுவிவிட வேண்டும்.

Next Story