பென்னிக்கல் பகுதியில் யானைகள் அட்டகாசம் விவசாயிகள் கவலை


பென்னிக்கல் பகுதியில் யானைகள் அட்டகாசம் விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 18 May 2019 9:45 PM GMT (Updated: 18 May 2019 5:53 PM GMT)

பென்னிக்கல் பகுதியில் யானைகள் அட்டகாசம் செய்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

ராயக்கோட்டை, 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் 20-க்கும் மேற்பட்ட யானைகள் பல குழுக்களாக பிரிந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இந்த யானைகள் சானமாவு, பீர்ஜேப்பள்ளி, பென்னிக்கல் பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. நேற்று பென்னிக்கல் பகுதியில் புகுந்த யானைகள் அங்குள்ள தோட்டத்தில் இருந்த தக்காளி, பச்சை மிளகாய் உள்ளிட்ட பயிர்களை கால்களால் மிதித்து சேதப்படுத்தியது.

இதை பார்த்த விவசாயிகள் இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் வனத்துறையினர் அங்கு வந்து பட்டாசு வெடித்து யானைகளை சானமாவு வனப்பகுதிக்கு விரட்டினார்கள். யானைகளின் தொடர் அட்டகாசத்தால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

கிராம பகுதிகளில் முகாமிட்டுள்ள யானைகள் தொடர்ந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. எனவே இந்த யானைகளை தேன்கனிக்கோட்டை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டிட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியே வராமல் இருக்க பெரிய தடுப்பு பள்ளங்கள் வெட்ட வேண்டும். யானைகளால் சேதமடைந்த பயிர்களுக்கு வனத்துறையினர் உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story