தஞ்சையில் இருந்து தர்மபுரிக்கு அரவைக்காக 1,900 டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பப்பட்டது


தஞ்சையில் இருந்து தர்மபுரிக்கு அரவைக்காக 1,900 டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பப்பட்டது
x
தினத்தந்தி 19 May 2019 4:15 AM IST (Updated: 19 May 2019 12:56 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் இருந்து தர்மபுரிக்கு அரவைக்காக 1,900 டன் நெல் சரக்கு ரெயில் அனுப்பப்பட்டது.

தஞ்சாவூர்,

தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு சாகுபடி செய்யப்படும் நெல் தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் கொள்முதல் செய்யப்படும். அதன்படி தற்போது கொள்முதல் செய்யப்பட்ட நெல் தஞ்சை பிள்ளையார்பட்டி மற்றும் புனல்குளத்தில் உள்ள சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இது தவிர நெல் மூட்டைகள் அரவைக்கு அனுப்பப்பட்டு அரிசிமூட்டைகளும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

1,900 டன் நெல்

இவ்வாறு இருப்பு வைக்கப்பட்டுள்ள அரிசி மற்றும் நெல் மூட்டைகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு சரக்கு ரெயில் மற்றும் லாரிகள் மூலம் பொதுவினியோகத்திட்டத்தின் கீழ் வினியோகம் செய்வதற்காகவும், அரவைக்காகவும் அனுப்பி வைக்கப்படும்.

அதன்படி நேற்று சேமிப்புக்கிடங்குகளில் இருந்து லாரிகள் மூலம் நெல் மூட்டைகள் தஞ்சை ரெயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் அங்கிருந்து சரக்கு ரெயிலில் 42 வேகன்களில் 1,900 டன் நெல் ஏற்றப்பட்டு தர்மபுரிக்கு அரவைக்காக கொண்டு செல்லப்பட்டன.
1 More update

Next Story