ராமலிங்க சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் கத்தி போடுதல் நிகழ்ச்சி


ராமலிங்க சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் கத்தி போடுதல் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 18 May 2019 10:30 PM GMT (Updated: 18 May 2019 7:58 PM GMT)

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் இருந்து விருத்தாசலம் செல்லும் சாலையில் காந்தி பூங்கா அருகில் உள்ள ராமலிங்க சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் இருந்து விருத்தாசலம் செல்லும் சாலையில் காந்தி பூங்கா அருகில் உள்ள ராமலிங்க சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து நேற்று காலை தேவாங்கர் சேடர் குளத்தில் இருந்து பக்தர்கள் கத்தி போடுதலுடன் ஊர்வலமாக கோவிலுக்கு வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி ராமலிங்க சாமுண்டீஸ்வருக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மாலையில் அம்மன் வீதிஉலா நடைபெற்றது. இதில் சுற்றுப்பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. கத்தி போடுதல் நிகழ்ச்சி யுடன் பக்தர்கள் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தபோது ஜெயங்கொண்டம் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை ஜெயங்கொண்டம் போலீசார் ஒழுங்கு படுத்தினர். 

Next Story