2 லாரிகள் மோதி கவிழ்ந்தன, டிரைவர் பலி - 2 பேர் படுகாயம்
சமயநல்லூரில் இருந்து நாகமலைபுதுக்கோட்டை நோக்கி நான்கு வழிச்சாலையில் 2 லாரிகள் மோதி கவிழ்ந்த விபத்தில் டிரைவர் ஒருவர் பலியானார்.
நாகமலைபுதுக்கோட்டை,
மதுரை இஸ்மாயில்புரத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன் மகன் கணேஷ்பாண்டி (வயது 39). லாரி டிரைவர். இவர் நேற்று அதிகாலை சமயநல்லூரில் இருந்து நாகமலைபுதுக்கோட்டை நோக்கி நான்கு வழிச்சாலையில் லாரியை ஓட்டிச்சென்றார். அப்போது பின்னால் வந்த மற்றொரு லாரி கணேஷ்பாண்டி ஓட்டிச்சென்ற லாரி மீது பின்புறமாக மோதியது.
இதில் கட்டுப்பாட்டை இழந்த 2 லாரிகளும் அடுத்தடுத்து கவிழ்ந்தன. அப்போது உயிர் தப்புவதற்காக கீழே குதித்த கணேஷ்பாண்டி விபத்தை ஏற்படுத்திய லாரியின் அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு லாரி டிரைவரான சாத்தூர் அருகே உள்ள பந்துவார்பட்டியைச் சேர்ந்த வேல்முருகன்(49), அதில் பயணித்த ராஜாராம் ஆகியோர் காயமடைந்தனர். இதுகுறித்து கணேஷ்பாண்டி மனைவி முத்துலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் நாகமலைபுதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் விசாரித்து வருகிறார்.
Related Tags :
Next Story