மக்கள் நீதி மய்யம் சார்பில், அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது போலீஸ் சூப்பிரண்டிடம் புகார்
விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜனிடம் அருப்புக்கோட்டை தொகுதி மக்கள் நீதி மய்யம் பொறுப்பாளர் வக்கீல் ராஜேஸ்வரி ஒரு மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-
விருதுநகர்,
மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசனை மிரட்டும் வகையிலும் அரசியல் சட்டத்துக்கு எதிராகவும் கண்ணியக்குறைவாகவும் அமைச்சரான ராஜேந்திரபாலாஜி கருத்து பதிவு செய்துள்ளார். வரம்பு மீறி பேசி வன்முறையை தூண்டியுள்ளார். இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார். அப்போது மாவட்ட பொறுப்பாளர் காளிதாஸ், தொகுதி பொறுப்பாளர்கள் சங்கர்(விருதுநகர்), கனகராஜ்(சாத்தூர்) பால்ராஜ்(ஸ்ரீவில்லிபுத்தூர்) மற்றும் அருப்புக்கோட்டை மணிகண்டன் ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story