பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை


பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 20 May 2019 4:00 AM IST (Updated: 20 May 2019 12:46 AM IST)
t-max-icont-min-icon

என்ஜினீயரிங் பட்டதாரியான இவருக்கு பெற்றோர் திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர்.

திருவொற்றியூர்,

கும்மிடிப்பூண்டியை அடுத்த சின்னஓபுளாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் குமரேசன். லாரி டிரைவர். இவரது மகள் ஆர்த்தி (வயது 21). என்ஜினீயரிங் பட்டதாரியான இவருக்கு பெற்றோர் திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த ஆர்த்தி மின்விசிறியில் தூக்குப்போட்டு கொண்டதாக கூறப்படுகிறது. இதை அறிந்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் மகிதா அன்ன கிறிஸ்டி தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

Next Story